ஆடு பகை குட்டி உறவா? போட்டி போட்டு வாழ்த்திய சகோதரிகள்- நெகிழ்ச்சியில் வனிதா மகன்
நடிகை வனிதா மகன்- விஜய் ஸ்ரீஹரி நடித்த படத்தை திரையில் காண ஆவலாக இருப்பதாக சகோதரிகள் போட்ட பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
விஜயகுமார் குடும்பத்தினர்
தமிழ் சினிமாவில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேல் பயணிக்கும் மூத்த நடிகர் தான் விஜயகுமார்.
இவரின் இரண்டு மனைவிகளுக்கும் பிறந்த குழந்தைகள் வெள்ளித்திரையில் மிகப்பெரிய நடிகர்களாக வலம் வருவார்கள் என எதிர்பார்த்த நிலையில், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டனர்.
இவர்களில் அனிதா, கவிதா, ஸ்ரீதேவி, ப்ரிதா ஆகியோரை தவிர அருண் விஜய் மற்றும் வனிதா இருவரும் இயன்றளவு பட வாய்ப்புகளை தேடி நடித்து வருகிறார்கள்.
விஜயகுமாரின் மூத்த மகள் அனிதா விஜயகுமார், சினிமாத்துறை பக்கமே வராமல் வெளிநாட்டில் புகழ்பெற்ற மருத்துவராக இருந்து வருகிறார்.
அவரின் ஆசை மகள் திவ்யாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையில் பிரமாண்டமாக திருமணம் நடந்தது.
ஒன்றுக்கூடிய குடும்பம்
இந்த நிலையில் வனிதாவின் மகனும், விஜயகுமாரின் பேரனுமாகிய விஜய் ஸ்ரீஹரி நடிக்கும், "மாம்போ" திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.
இந்த திரைப்படத்தை பிரபு சாலமன் இயக்கியுள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரோஜா கம்பைன்ஸ் காஜா மைதீன் இந்த படத்தை தயாரிக்கிறார்.
இந்த படத்தின் போஸ்டர் வெளியாகிய நிலையில் வனிதா உட்பட அவரின் சகோதரிகளும் தங்களின் வாழ்த்துக்களையும், ஆசீர்வாதங்களையும் ஸ்ரீஹரிக்கு வழங்கியுள்ளனர்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன், “ அம்மா பகை, பிள்ளை உறவா?” என ரசிகர்கள் கேள்வியெழுப்பியும் வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |