உயிரிழக்கும் முன்பு வனிதாவை அழைத்த தாய் மஞ்சுளா... வெட்ட வெளிச்சமான உண்மைகள்
நடிகை வனிதா தனது தாய் மதுபழக்கத்திற்கு அடிமையானதைக் குறித்தும், அவரது கடைசி நாட்களில் அரங்கேறிய பாசப்போராட்டம் குறித்தும் பேசியுள்ளார்.
நடிகை வனிதா
நடிகை வனிதா 2000ம் ஆண்டும் நடிகர் ஆகாஷை திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு ஸ்ரீஹரி மற்றும் ஜோவிகா என்ற இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். ஆகாஷ் வனிதாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்.
இந்த இரு குழந்தைகளில் ஜோவிகா வனிதாவுடனும், ஸ்ரீஹரி தாத்தா விஜயகுமார் மற்றும் தந்தை ஆகாஷ் உடன் வாழ்ந்து வருகின்றார். எந்தவொரு விடயத்தை செய்தாலும் அதில் ஒரு சர்ச்சையில் சிக்கும் இவர் அதையெல்லாமல் கண்டுகொள்ளாமல் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றார்.
நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதியின் மகளான இவர் தனது பெற்றோர்களிடம் சண்டையிட்டு குழந்தைகளுடன் வெளியேறினார். இவர்களது சண்டை வெளியுலகிற்கு தெரிந்து அதிக சலசலப்பை ஏற்படுத்தியது.
ஸ்ரீஹரி குழந்தையாக இருக்கும் போது, அவரை தன்னுடன் அழைத்துச் செல்ல வனிதா நடத்திய பாசப்போராட்டத்திற்கு அளவில்லாமல் இருந்தது. அதன் பின்பு தந்தை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை வைத்தார்.
தந்தையின் வெறுப்பிற்கு மட்டுமின்றி தாயின் வெறுப்பிற்கும் ஆளானார். இவரது தாய் மஞ்சுளா வனிதாவை பார்த்து, அவள் தனது மகள் கிடையாது... ராட்சசி... அவள் என் வயிற்றில் பிறந்ததை நினைக்கும்போதே கேவலமாக உள்ளது என்று திட்டித்தீர்த்தார்.
மஞ்சுளாவின் இறுதி நாட்கள்
இதையடுத்து நடிகை மஞ்சுளா கடந்த 2013ம் ஆண்டு காலமானதையடுத்து, அவருக்கு வனிதாவை இறுதிச்சடங்கு செய்யவிடாமல் பிர்ச்சினை செய்தது சர்ச்சையானது.
சமீபத்தில் ஷகீலா உடன் பேட்டியில் தனது தாயை குறித்து பல ரகசியங்களை உடைத்துள்ளார். ஏர்போட்டில் மகனுக்காக நடந்த சண்டையை அடுத்து தனது தாய் வீட்டிற்கு அழைத்ததாகவும், அப்போது வீட்டுக்கு வந்து தந்தையின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கதறி அழுததாகவும் கூறியுள்ளார்.
தனது தாய் மஞ்சுளாவிற்கு மூன்று முறை மஞ்சள் காமாலை வந்தும் அவர் குடிப்பழக்கத்தை விடவில்லை என்றும், அவர் பேட்டி ஒன்றின் போது மதுபோதையில் இருந்தது உலகத்திற்கே தெரியும். பின்பு 72 மணி நேரத்தில் எனது தாய் இறந்துவிடுவார் என்று தெரிந்ததும், தன்னை அழைத்து சில ரகசியங்களை கூறியதாக கூறியுள்ளார்.
சொத்து பத்திரங்களில் எல்லாம் தனது பெயரை சேர்க்க வேண்டும் என்று மிகப்பெரிய வக்கீலான ராம்ஜெத்மலானியிடம் கூறியது மட்டுமின்றி, பல உண்மைகளை கூறுகிறேன் வீடியோவாக எடு என்று கூறினார்.. ஆனால் அதனை அப்போது செய்யவில்லை என்றும், தனது தந்தையிடமும் வனிதாவை விட்றாதீங்க என்றும் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பின்பு வனிதா பேசுகையில், எனக்கு சொத்தில் உரிமையில்லைனு சொல்றாங்க, அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. சொத்து பிரிக்கப்பட்டால் என்னுடைய மகள்களுக்கும் ஒரு பங்கு கிடைக்க வேண்டும்... அதுவே எனது விருப்பம் என வனிதா கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |