என் வாழ்க்கையை சீரழிச்சதே அப்பா தான்.. வனிதா பகீர் குற்றச்சாட்டு! மீண்டும் வைரலாகும் காணொளி
பிக்பாஸ் பிரபலம் வனிதா விஜயகுமார் தன்னுடைய அப்பாவான விஜயகுமாரால் தான் தன்னுடைய வாழ்க்கை சீரழிந்தது என சில வருடங்களுக்கு முன்பு பேசிய காணொளி தற்போது மீண்டும் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சமீபத்தில் நடிகர் விஜயகுமாரின் பேத்தி திருமணம் வெகுவிமர்சியாக நடந்தது. ஆனால் அவரது மகளும், நடிகையுமான வனிதா விஜயகுமார் அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
வனிதா விஜயகுமார்
விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இப்போது சின்னத்திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை வனிதாவுக்கு பிக்பாஸ் தான் மிகப்பொரும் விளம்பரமாக அமைந்தது.
நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதியின் மகள் வனிதாவுடன் அவருடைய குடும்பத்தினர்கள் யாரும் பேசுவது கிடையாது என்பது ஊர் அறிந்த ரகசியம் தான்.
இப்போது தன்னுடைய குடும்பத்தை பிரிந்து தன்னுடைய இரண்டு மகள்களையும் வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் வனிதா தன்னுடைய அப்பா குறித்து பேட்டி ஒன்றில் குறிப்பிடுகையில்,என்னுடைய அப்பா சமீபத்தில் ஒரு பேட்டியில் என்னுடைய மகள்கள் எப்படி என்று ஒவ்வொருவர் பேரையும் சொல்லி சொல்லி இருந்தார்.
என்னுடைய அப்பா என்னுடைய பேச்சை கேட்ட பிள்ளைகள் என்று என் பெயரை தவிர மிச்சம் உள்ள எல்லோரின் பெயரையும் சொல்லியிருந்தார்.அது எனக்கு மிகுந்த மன வலியை கொடுத்தது.
நான் பல தடவை கோபத்தில் அழுதேன். ஆனால் உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் என்னுடைய அப்பா பேச்சை கேட்ட பிள்ளை என்றால் அது நான் மட்டும்தான். அவரால் தான் என்னுடைய வாழ்க்கை சீரழிஞ்சு போச்சு என குறிப்பிட்டுள்ளார்.
இது சில வருடங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட காணொளியாக இருந்தாலும் இப்போது விஜயகுமார் வீட்டில் நடந்த திருமணத்தில் வனிதாவை அவர்கள் கூப்பிடாமல் ஒதுக்கி வைத்த காரணத்தினால் இதனை இணையத்தில் ரசிகர்கள் மீண்டும் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |