விஜய்யின் நண்பர் சஞ்சீவ், வனிதாவுக்கு அண்ணன் உறவுமுறையா? வெளியான உண்மையால் பிரமித்துப் போன ரசிகர்கள்
நடிகை வனிதா நான்காவதாக ஒருவரை திருமணம் செய்துள்ளார் என்ற சர்ச்சைக்கு சமீபத்தில் முற்றுப்புள்ளி வைத்த நிலையில், தனது அண்ணன் மற்றும் அவரது மனைவியுடன் எடுத்துள்ள புகைப்படம் தீயாய் பரவி வருகின்றது.'
தமிழ் சினிமாவில் நடித்து வரும் வனிதா, ஆரம்பத்திலிருந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்று மக்களின் வெறுப்பினை சம்பாதித்து, பின்பு நல்ல அம்மா என்று பெயர் வாங்கினார்.
ஆனால் அது சிறிது நாட்கள் கூட நீடிக்கவில்லை. ஆம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து பெரும் சர்ச்சையினை சந்தித்ததோடு, அவரையும் சில மாதங்களில் பிரிந்தார்.
வாழ்வில் எத்தனை சர்ச்சைகளை சந்தித்தாலும் விரைவில் மறந்துவிட்டு, பீனிக்ஸ் பறவையாக வலம் வரும் வனிதா தற்போது தனது இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருக்கும் வனிதா அங்கு வந்திருந்த பல நட்சத்திரங்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.
குறிப்பாக நடிகர் சஞ்சீவ் மற்றும் அவரது மனைவியுடன் எடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.
நடிகர் சஞ்சீவ் விஜய்யுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளதோடு, பிரபல ரிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் சீரியல் மக்கள் மத்தியில் புகழின் உச்சத்திற்கு சென்றுள்ளார்.
வனிதா இப்புகைப்படத்தினை பதிவிட்டு அவர் கூறியதாவது, தனது தாயின் சகோதரி மகன் சஞ்சீவ், தனக்கு சிறந்த சகோதரர் என்று குறிப்பிட்டுள்ளார்.
