திருமணத்திற்கு பெண்கள் எப்படிப்பட்ட ஹேர் ஸ்டைலை தேர்வு செய்யலாம் தெரியுமா?
திருமண நாளில் ஆணும் பெண்ணும் தலையில் அணிவது முதல் கால் பாதத்தில் அணிவது வரை எல்லாம் நன்றாக இருக்கவேண்டும் என்ற ஆசை இருக்கும்...
அதிலும், நீங்கள் ஆடை மற்றும் நகை அலங்காரம் செய்து கொள்வதில் கவனம் செலுத்தும்போது, உங்கள் கூந்தல் அலங்காரத்தை மேம்படுத்திக்கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும், உங்கள் திருமண நாளுக்கான தலைமுடி நிறத்தை தேர்வு செய்வது என்று வரும் போது, உங்கள் மண நாள் தோற்றத்தை பாதிக்காத வகையில் சரியான தலைமுடி நிறத்தை தேர்வு செய்வதற்கான வழியை பற்றி இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.
உங்கள் ஸ்கின்டோன் உங்களுக்கான மணப்பெண் தோற்றம் உங்கள் கூந்தலின் தன்மை ஒரு சில கூந்தல் வண்ணங்கள் கண்களை எடுப்பாக்கி, உங்கள் தோற்றத்தை மேலும் பொலிவாக்க கூடியவை என்றாலும், ஒரு சில வண்ணங்கள் அவற்றை பாதித்துவிடக்கூடும்.
இது நிச்சயம் நீங்கள் விரும்பக்கூடியதல்ல. சிவந்த அல்லது நல்ல நிறம் கொண்ட சருமம் எனில், பர்கண்டி அல்லது உட் அல்லது ஹனி ஹைலைட்ஸ் ஷேடை நாடலாம். மாநிறம் அல்லது கோதுமை நிறம் கொண்ட சருமம் எனில், அடர் சிவப்பு அல்லது கோல்டன் ஹைலைட்ஸ், டீப் பிரவுனை நீங்கள் தேர்வு செய்யலாம்.
உங்கள் ஆடைகளும், தோற்றமும் உங்கள் ஆளுமைக்கு பொருத்தமாக இருக்க வேண்டும். உங்கள் திருமண நாளுக்கான மணப்பெண் தோற்றம் பற்றி நன்றாக யோசியுங்கள். ஏனெனில் உங்கள் கூந்தலின் வண்ணம் அதை பாதிக்கலாம்.
பாரம்பரிய மணப்பெண் தோற்றமா அல்லது நவீன மணப்பெண் தோற்றமா அல்லது ஐரோப்பிய பாணியிலான தோற்றமா? என்பதை பொருத்து இது அமையும்.
குளிர்ந்த ஷேட் கொண்ட நுட்பமான தோற்றம் நேர்த்தியான மணப்பெண் தோற்றத்திற்கு வலு சேர்க்கும். இதையடுத்து, தேவதை போன்ற மணப்பெண் தோற்றம் எனில், காரமெல் பிரவுன் அல்லது ஹாஸ்லேநெட் ஷேட் பொருத்தமாக இருக்கும்.
சிடுக்கான முடி எனில், ஹைலைட்டை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை கூந்தலின் தன்மை மீது அதிக கவனத்தை குவிக்கும்.