நெற்றியில் குங்குமம் இருக்கு.... புருஷன் யாருனு கேட்கிறாங்க! உண்மையை உடைத்த வனிதா
பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது ஏன் என்று வனிதா விஜயகுமார் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் வனிதா அளித்த பேட்டியில், தனியார் டிவிக்கும் எனக்கும் எந்தவொரு பிரச்சினையுமே இல்லை.
பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை சொன்ன விஷயங்களில் சில எனக்குப் பிடிக்கவில்லை.
அந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை அனைவருமே ஸ்டார்களாகத் தான் உள்ளே சென்றோம். அனைவருமே பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் தான்.
அதற்குரிய மரியாதை அனைவருக்குமே கொடுத்து தான் ஆகவேண்டும். அது கொஞ்சம் தளர்வானதில் எனக்கு ஈடுபாடு இல்லை. அதனால் தான் அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகிவிட்டேன்.
சமூக வலைதளத்தில் நிறையத் தவறுகள் நடக்கிறது என்பது உண்மை தான். தனிப்பட்ட விஷயங்களில் தான் தவறாகப் பேசுகிறார்கள்.
நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு நின்றால், யார் உன் புருஷன் என்று கேட்கிறார்கள் என்று குறிிப்பிட்டுள்ளார்.