3 தடவ மஞ்சள் காமாலை வந்தும்.. தாய் மஞ்சுளாவின் கடைசி நிமிடத்தை விவரித்த வனிதா
விஜயகுமாரின் மனைவியும் நடிகையுமான மஞ்சுளா மது பழக்கத்திற்கு அடிமையானது குறித்து அவரது மகள் வனிதா வெளிப்படையாக கூறியுள்ளார்.
நடிகை வனிதா
தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம்வரும் நடிகை வனிதா. நடிகர் விஜயகுமாருக்கும், அவரது இரண்டாவது மனைவியான மஞ்சுளாவிற்கும் பிறந்தவர் ஆவார்.
தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை விட்டு வெளியேறிய வனிதா தனியாக வாழ்ந்து வருகின்றார்.
ஒருமுறை மகனை அழைத்துச் செல்ல வனிதா விமானநிலையத்தில் சண்டையிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதன் பின்பு வனிதா அடுக்கடுக்கான குற்றச்சாட்டை தனது தந்தை குறித்து வைத்துள்ளார்.
தந்தையை மட்டுமின்றி தனது தாய் மஞ்சுளவும் வனிதாவிற்கு எதிராக பேசினார். கடந்த 2013ம் ஆண்டு மஞ்சுளா மரணமடைந்த நிலையில், அவரது இறுதிச்சடங்களில் வனிதாவை கலந்து கொள்ள விடாமல் தந்தை தடுத்துள்ளார். பின்பு சரத்குமார், ராதாரவி அங்கில் உதவியால் அதில் கலந்து கொண்டுள்ளதாக வனிதா கூறியுள்ளார்.
தாயின் மதுப்பழக்கம்
இந்நிலையில் தனது தாய் மஞ்சுளாவின் கடைசி நிமிடங்கள் குறித்து வனிதா பேசியுள்ளார். அம்மாவிற்கு 3 முறை மஞ்சள் காமாலை வந்த நிலையில், அப்பொழுது கூட அவரது குடிப்பழக்கத்தை விடவில்லை.
ஒருமுறை போதையில் மஞ்சுளா பேட்டி கொடுத்ததை உலகமே பார்த்தது என்றும், 72 மணி நேரத்தில் இறந்துவிடுவேன் என்ற தருணத்தில் கடைசியாக அவர் பகிர்ந்த ரகசியத்தையும் கூறியுள்ளார்.
இந்தியாவிலேயே தலைசிறந்த வழக்கறிஞராக இருக்கும் ராம்ஜெத்மலானியை அழைத்து, அனைத்து சொத்து பத்திரங்களிலும் என் பெயரை சேர்க்குமாறு கூறினார்.
மேலும் தான் கூறுவதை காணொளியாக எடுக்க தனது தாய் கூறியதை நான் செய்யாமல் விட்டுவிட்டேன், பின்பு எனது தந்தையிடம் வனிதாவை விட்டுவிடாதீர்கள் என்றும் கூறியதாக வனிதா கூறியுள்ளார்
அதுமட்டுமின்றி தான் பல உண்மைகளை சொல்லப்போகிறேன், அதனை வீடியோவாக எடு என என்னிடம் கூறினார். ஆனால் நான் அதை செய்ய மறுத்துவிட்டேன். அதுமட்டுமின்றி எனது தந்தையிடமும் வனிதாவை விட்றாதீங்க என என் தாய் சொன்னார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |