மகளுக்கு குழந்தை பெற்றுக் கொடுக்கும் முடிவில் வனிதா? சர்ச்சை பேச்சினால் அவிழ்ந்த உண்மை
நடிகை வனிதா தனது மகள் ஜோவிகாவிற்கு தானே குழந்தை பெற்றுக் கொடுப்பதாகவும், அவர் வளர்த்தால் மட்டும் போதும் என்று பகிரங்கமாக கூறியுள்ளார்.
நடிகை வனிதா
தமிழ் திரையுலகில், மூன்று தலைமுறைகளாக நடித்து கொண்டிருக்கும் நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதிகளின் மூத்தமகள் தான் நடிகை வனிதா.
குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்த இவர், பின்பு விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
பின்பு ஆகாஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன், இரண்டு மகள் உள்ள நிலையில் அவரைப் பிரிந்தார். இதில் மகன் ஆகாஷிடமும், ஒரு மகள் வனிதாவுடனும், மற்றொரு மகள் அவரது முன்னாள் கணவருடனனும் இருந்து வருகின்றனர்.
சமீபத்தில் ரோபோ சங்கர் தம்பதிகளிடம் பேட்டி எடுக்கும் போது இந்திரஜா திருமணம் குறித்து பேசப்பட்டது. அப்பொழுது வனிதா சட்டென்று தனது மகள் ஜோவிகாவிற்கு தானே குழந்தை பெற்றுக் கொடுக்கப் போவதாகவும், படப்பிடிப்பிற்கு குழந்தையை எடுத்துச் சென்று வளர்த்தால் மட்டும் போதும் என்று கூறியுள்ளார்.
மேலும் பெற்றால் தான் குழந்தையா என்ற கேள்வியையும் எழுப்பி, தனது மனதில் உள்ள விடயத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்.
பொதுவாகவே வனிதா வெளிப்படையாக பட்டென்று பேசக்கூடியவர் என்று அனைவருக்கும் தெரிந்தாலும், தற்போது தனது மகளுக்காக குழந்தை பெற்றுக்கொடுப்பதாக கூறியுள்ளது தகவல் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |