முதலில் அதை நிறுத்து.... அதை எவராலும் மாற்ற முடியாது - யாஷிகாவுக்கு நடிகை வனிதா அறிவுரை
விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகை யாஷிகாவுக்கு வனிதா அறிவுரை கூறி உள்ளார்.
யாஷிகாவுக்கு நடிகை வனிதா கமெண்ட் வாயிலாக அறிவுரை கூறி உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: “டார்லிங் யாருக்கு வேண்டுமானாலும் இது நடந்து இருக்கலாம். அதனால் தான் அதனை விபத்து என்கிறோம். பிறப்பும் இறப்பும் முன்பே முடிவு செய்யப்பட்டது.
அதை எவராலும் மாற்ற முடியாது. உன் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு விஷயத்திற்காக உன்னை நீயே குற்றம்சொல்வதை முதலில் நிறுத்து.
மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டுகொள்ளாதே. நீ தெளிவாக இருக்க வேண்டும்.
நன்றாக ஓய்வெடு, உடல்நலனை பார்த்துக்கொள். இந்த விபத்தில் இருந்து நீ பிழைத்திருப்பதற்கு ஒரு காரணம் இருக்கும். கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்” என வனிதா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.