30 வயது வரை திருமணம் செய்யாதீங்க... மகள்களுக்கு வனிதா கொடுத்த அட்வைஸ்
நடிகை வனிதா தனது மகள்கள் திருமணம் குறித்து பேசியுள்ள கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை வனிதா
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடி என்றால் அது விஜயகுமாரும் மஞ்சுளாவும்தான். விஜயகுமாருக்கும் அவரது முதல் தாரம் முத்துக்கண்ணுவிற்கு பிறந்த குழந்தைகள் தான் கவிதா, அனிதா, அருண்விஜய் ஆகியோர் ஆவார்.
பின்பு விஜயகுமார் சக நடிகையான மஞ்சுளாவை முதல் மனைவி சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு, வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் இருக்கும் நிலையில், இவர்களும் சினிமா பிரபலங்களாக இருக்கின்றனர்.

நடிகை வனிதா தனது தந்தையுடன் சண்டையிட்டு, இரண்டு திருமணத்திற்கு மேல் செய்தும் தனியாக மகளுடன் வாழ்ந்து வருகின்றார்.
சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது இவரது தாய் பாசம் மக்களின் கல்மனதையும் கரைய வைத்தது. பின்பு மக்களுக்கு பிடித்தமான வனிதாவாகுவம் மாறியுள்ளார்.
இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்த வனிதா, தற்போது மூத்த மகள் ஜோவிகாவும், அவரும் இருந்து வருகின்றார்.

அப்பாவுடன் இளைய மகள்
அவரது இரண்டாவது மகள் பெரிய பொண்ணாக ஆன பின்பு அவர் தனது அ்ப்பாவுடன் சேர்ந்து இருந்து வருகின்றார். அவ்வப்போது தாய் வனிதாவை சந்தித்து வரும் நிலையில் சமீபத்தில் எடுத்த புகைப்படமும் வைரலாகியது.
இரண்டாவது மகள் சிறு பெண்ணாக இருந்தவர் தற்போது மிகப்பெரிய பெண்ணாக மாறியுள்ளார். இவரது நடவடிக்கையை அவ்வப்போது புகைப்படங்களாக வனிதா பகிர்ந்து வருகின்றார்.

இந்நிலையில் வனிதா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மகள்களின் திருமணம் குறித்து பேசியுள்ளார். அதாவது தனது மகள்களிடம் 30 வயது வரை திருமணம் செய்து கொள்ள வேண்டாம்...
இவரோடு வாழப்போறோம் என்று முடிவெடுத்தால் திருமணம் செய்து கொள்ளுங்கள் அல்லது லிவிங் டூ கெதரில் இருங்கள் என்று கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். வனிதாவின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |