ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் வெள்ளை தாமரையாய் ஜொலிக்கும் வாணி போஜன்... கிரங்கி போன ரசிகர்கள்
சின்னத்திரை நயன்தாரா என சொல்லும் அளவிற்கு, சின்னத்திரை ரசிகர்களை தன்னுடைய அழகாலும், நடிப்பாலும் அதிகம் கவர்ந்தவர் நடிகை வாணி போஜன்.
தற்போது வெள்ளை நிற புடவையில் வெளியிட்டுள்ள போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
வாணி போஜன், நடிகர் அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் நடித்த, 'ஓ மை கடவுளே' படத்தின் மூலம் அறிமுகமானார்.
அந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால், ஹீரோயின் ரித்திகா சிங்கை தூக்கி சாப்பிடும் அளவிற்கு ரசிகர்களை ஈர்த்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கை பற்ற துவங்கிவிட்டார்.
மேலும் தொடர்ந்து பட வாய்ப்புகளை கைப்பற்ற, விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது... அழகு புதுமையாய் வெள்ளை சேலையில் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படத்துக்கு லைக்குகள் அள்ளுகிறது.



