யாரும் எதிர்பாராத வகையில் உச்சத்தை தொட்ட பிட்காயின் மதிப்பு.. எவ்வளவு தெரியுமா? குஷியில் முதலீட்டாளர்கள்!
காயின் மதிப்பு இன்றைய வர்த்தகத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில், ஓரே நாளில் 1,500 டாலர் வரையில் உயர்ந்து 51,512 டாலர் என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. உலகம் முழுவதும் கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்குக் கடுமையான நெருக்கடி உருவாகி வரும் நிலையில் கடந்த நாளில் வர்த்தகத்தில் முதல் முறையாகப் பிட்காயின் 50,000 டாலரை அடைந்த நிலையில் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்குச் சென்றனர்.
மேலும், தற்போது பிட்காயின் மதிப்பு 6 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி அடைந்து 51,512.11 டாலர் என்ற புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அடுத்த சில மாதத்தில் பிட்காயின் 50,000 டாலரைத் தொடும் எனக் கணித்திருந்தது.
ஆனால் பெரும் சரிவைக் கடந்து வெறும் 45 நாட்களில் 50,000 டாலக் அளவீட்டைக் கடந்துள்ளது பிட்காயின். பிட்காயின் மதிப்பு இன்று அடைந்துள்ள புதிய உச்சத்தின் மூலம் பிட்காயின் மதிப்பின் மொத்த சந்தை மதிப்பு 960 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது.