குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க... தினமும் கொடுக்க வேண்டிய சூப்
பெற்றோர்களுக்கு குழந்தைகளில் வளர்ச்சி என்பது மிக முக்கியமானதொன்றுதான். அப்படி குழந்தைகளின் மூளையை பன்மடங்கு வளர்ச்சியடைய வல்லாரை சூப் மிகவும் உதவுகிறது. இந்த சூப்பை தினமும் குடித்து வந்தால் சிறார்கள் மூளை பயங்கர வளர்ச்சியடையும்.
அந்தவகையில் இந்த சூப்பை எப்படி செய்வது என்பது குறித்து விளக்கமாக பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வல்லாரை கீரை – 15
பூண்டு – 2 பல்
சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி
சீரகம் – 1/2 கரண்டி
நெய் – 1 கரண்டி
எண்ணெய் - 1 கரண்டி
பாசிபருப்பு – 1 கரண்டி (வேகவைத்தது)
உப்பு – தேவையான அளவு
மிளகுத்தூள் – தேவையான அளவு
மல்லித்தழை
செய்முறை
வல்லாரை கீரை சூப் செய்வதற்கு முதலில் வல்லரை கீரை, கீரகம், பூண்டு, வெங்காயம் அனைத்தையும் நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் நெய் மற்றும் எண்ணெய்யை சேர்த்து சூடாக்கி அரைத்து எடுத்துக் கொள்ள விழுதுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பச்சை வாசம் போகும் அளவிற்கு கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர் வேகவைத்து மசித்து எடுத்துக் கொண்ட பாசிபருப்பை அதில் சேர்த்து உப்பு மற்றும் காரத்திற்காக மிளகுதூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் கொத்தமல்லித் தழையை சூப் மீது தூவி இறக்கி ஆறவைத்து குடிக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |