காதலர் தினம் பிரபலமானது எப்படி தெரியுமா? பலரும் அறியாத உண்மை கதை
இன்று உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் காதலர் தினத்தினை கொண்டாடியுள்ள நிலையில், இந்த காதலர் தினம் எவ்வாறு வந்தது என்பதன் விரிவாக்கத்தை இங்கே தெரிந்து கொள்வதுடன், புதிய காதலர் தின பாடல் ஒன்றினையும் இங்கு அவதானிக்கலாம்.
காதலர் தினம்
செயிண்ட் வாலண்டைன்ஸ் என்று சொல்லப்படும் காதலர் நாள் எப்படி உருவானது என்பது தொடர்பில் பலவகையான கதைகள் உள்ளன.
ரோமானியப் பேரரசர் கிளாடியஸ் கோதிகஸின் (கி.பி. 269-270) ஆட்சியில் தடைசெய்யப்பட்ட கிறிஸ்தவத் திருமணங்களை நடத்திய பாதிரியாரின் பெயர்தான் வாலண்டைன். இந்த பாதிரியாரை ரோமில் சிறையில் அடைக்கப்பட்டதுடன், அவரது தலை துண்டிக்கப்பட்டது என்றும் வரலாறு கூறுகின்றது.
ஆங்கில இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சாசர் தனது கவிதை ஒன்றில் செயிண்ட் வாலண்டைன் நாள் அன்று பறவைகள் தமது துணையைத் தேர்ந்தெடுப்பதற்காக ஓர் ஒன்றுகூடலை நிகழ்த்துகின்றன என்று எழுதினார்.
கார்ல் வில்ஹெல்ம் டி ஹாமில்டன் என்ற ஓவியர் வரைந்த ‘பறவைகளின் பாராளுமன்றம்’ என்ற ஓவியம் சாசரின் காதல் கவிதைக்கு உத்வேகம் அளித்தது என்றும் கூறப்படுகின்றது.