வீட்டில் பணம் அதிகரித்து மகிழ்ச்சி பொங்க.. வலம்புரி சங்கை வைத்து இப்படி வழிபடுங்கள்!
பலருக்கும் வீட்டில் அதிகப்படியான மன அழுத்தம் உருவாகுவது உண்டு. அப்படி இருப்பவர்கள் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்க வலம்புரி சங்கினை வீட்டில் வைத்து வழிபடலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
வலம்புரி சங்கின் மகிமை
வலம்புரி சங்கானது வலம்புரி சங்கினை வீட்டில் வைத்து வழிபடலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. வலம்புரி சங்கை காதில் வைக்க, ஓம் என்ற பிரணவ சப்தம் வருவது தான் இதன் சிறப்பம்சமாகும்.
வலம்புரி சங்கினை ஐஸ்வர்யம் பெருக வீட்டிலோ அல்லது தொழில் விருத்தி அடையும் பொருட்டு அங்கயே வைத்துக்கொள்ளலாம்.
வலம்புரி சங்கு மிகவும் பவித்திரமானது என்பதால், அதனை சுத்தமாகவும், தினமும் பூஜை செய்தும் வழிபட வேண்டியது அவசியம்.
கணவன், மனைவி நல்ல ஆயுளுடன், மனமொத்த தம்பதியராக வாழ, சித்ரா பௌர்ணமி, ஆணி மாத வளர்பிறை அஷ்டமி, ஆடி மாத பூர நட்சத்திரம், புரட்டாசி மாத பௌர்ணமி போன்ற சிறப்பு நாட்களில் வலம்புரி சங்கில் பால் வைத்து மகாலட்சுமிக்கு பூஜை செய்தல் வேண்டும்.
ரசாயன கலப்பட மாம்பழத்தை எப்படி பார்த்து வாங்க வேண்டும்?
தினமும் வலம்புரி சங்கில் நீர் மற்றும் துளசி போட்டு அதனை தினமும் குடித்து வந்தால் நோய் நொடியில்லாத ஆரோக்கியத்தைப் பெறலாம்.
அடுத்ததாக, தினமும் வலம்புரி சங்கில் நீர் மற்றும் துளசி போட்டு அதனை தினமும் குடித்து வந்தால் நோய் நொடியில்லாத ஆரோக்கியத்தைப் பெறலாம்.
குழந்தை பாக்கியம் வேண்டி நிற்கும் தம்பதிகள்,பஞ்சமி திதிகளில் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் வலம்புரிச் சங்கில் சிறிது தேன் கலந்த பசும்பாலை வைத்து
குருவின் ஸ்துதியை 48 முறை உச்சாடனம் செய்து, அந்தத் தேன் கலந்த பசும்பாலை கணவன், மனைவி இருவரும் பிரசாதமாக அருந்தி வர சந்தான லட்சுமியின் அருளால், சந்தான பாக்கியத்தைப் பெறலாம்.
மேலும், ஜாதகத்தில் செவ்வாய் தோஷ பாதிப்பு உள்ளவர்கள், தோஷத்தின் வலிமை நிலைகளுக்கேற்றவாறு வலம்புரிச் சங்கு பூஜையைக் குறிப்பிட்ட காலத்திற்குச் செய்து வந்தால் தோஷ நிவர்த்தி அடையப் பெறலாம்.