பாரிய எதிர்ப்புக்கு பின் நீக்கப்பட்ட காணொளி: வறுத்தெடுக்கும் பிஸ்மி- பதில் கொடுப்பாரா இர்பான்?
குழந்தையின் பாலினம் குறித்து வெளியான காணொளி யூடியூப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இர்பான்
சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் யூடியூப்பர்களில் ஒருவர் இர்பான்.
இவர் பிரபலமான உணவகங்களுக்கு சென்று உணவுகளை சுவைத்து பார்த்து அதன் தரத்தை வீடியோவாக பதிவு விட்டு பிரபலமானவர். இதற்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
இர்பான் கடந்த வருடம் ஆலியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதனை தொடர்ந்து சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்து அந்த காணொளிகளை பகிர்ந்து வந்தார். இதன் மூலம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமைப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
சர்ச்சை பேச்சு
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தன் குழந்தையின் பாலினத்தை நண்பர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் பார்ட்டி வைத்து கூறியிருக்கிறார். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை தாயின் வயிற்றுக்குள் இருக்கும் போதே அதன் பாலினம் பார்ப்பது சட்டவிரோதம் என்பதால் இர்பான் மனைவியை துபாயிற்கு அழைத்து சென்று பார்த்து விட்டு வந்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து இது குறித்தான நடவடிக்கையை தமிழக மருத்துவத்துறை எடுக்கும் என கூறப்பட்டு வந்தது. ஆனால் இது குறித்தான எந்தவித நடவடிக்கையும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை.
கொந்தளிக்கும் பிஸ்மி
சமூக வலைத்தளங்களில் சர்ச்சை வெடித்து கொண்டிருக்கும் பொழுது பிரபல பேச்சாளர் பிஸ்மி இர்பான் பற்றி பல உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். அதாவது, சில காலங்களுக்கு முன்னர் இர்பான் ஒரு வயதான பெண் மீது காரை ஏற்றி அந்த இடத்திலேயே அவர் இறந்தும் போய் விட்டார்.
ஆனால் அது ஒரு உயர்ரக கார் அதற்கு ஓட்டுநர் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக பொலிஸாரிடம் ஓட்டுநர் வைத்திருந்தாக கதை மாற்றப்பட்டது. அந்த காரும் வழக்கு முடிய அவர்களுக்கு திருப்பிக் கொடுக்கப்பட்டது.
காரை பெற்ற போதே இர்பானுக்கு எவ்வளவு அரசியல் பலம் இருக்கிறது என்று தெரிகிறது. இர்பான் வீட்டில் நடக்கும் அத்தணை விடயங்களையும் வீடியோவாக பதிவேற்றி வருகிறார்.
சமீபத்தில் கூட அவருக்கு திருமணம் நடந்தது. முதல் இரவை தவிர்த்து அனைத்தையும் படம் போட்டு காட்டினார். இவர் செய்த மோசமான வேலைக்கு குறைந்த பட்ச தண்டணையாவது கொடுக்கப்பட வேண்டும்...” என கடுமையாக பேசியிருக்கிறார்.
பிஸ்மியின் பேச்சிற்கு சமூக வலைத்தளங்களில் பலத்த ஆதரவு குவிந்து வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |