பிரமாண்ட வீடு... பல ஏக்கர் நிலம் என சொகுசு வாழ்க்கை: வைகைப்புயல் வடிவேலுவின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இன்றைய தினம் தன் 63ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வடிவேலுவின் சொத்து மதிப்பு பற்றிய செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைகைப்புகழ் வடிவேலு
தமிழ் சினிமாவில் வைகைப் புகழ் வடிவேலு என அழைக்கப்படுபவர் தான் வடிவேலு. நகைச்சுவையில் மட்டுமல்ல பாடராகவும் இருந்திருக்கிறார்.
இவரின் நகைச்சுவையில் வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்த திரைப்படங்கள் தான் ப்ரண்ட்ஸ், வின்னர், சச்சின், சந்திரமுகி, மருதமலை, சுந்தரா ட்ராவல்ஸ் என பலத்திரைப்படங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
சில காலம் சினிமாவில் இருந்து காணாமல் போயிருந்த அவர் தற்போது நாய் சேகர், மாமன்னன் போன்ற திரைப்படங்களில் ரீ என்ரி கொடுத்தார். மேலும், இவர் நடிப்பில் தற்போது சந்திரமுகியின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது.
வடிவேலுவின் சொத்துமதிப்பு
இன்றைய தினம் வடிவேலு தனது 63ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில், வடிவேலு இத்தனை காலமாக எவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறார் என்ற தகவல் வைரலாகி வருகின்றது.
வடிவேலுவிற்கு சென்னையில் இரண்டு வீடுகள் இருக்கிறதாம் அந்த வீட்டின் மதிப்பு மட்டும் 2 கோடிக்கு இருக்கிறதாம். மேலும், இவரிடம் டொயோடோ, ஆடி, BMW போன்ற என நான்கு சொகுசு கார்கள் இருக்கிறதாம்.
அதுமட்டுமல்லாது மதுரையில் ஒரு வீடும், 20 ஏக்கர் நிலமும் உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்தவகையில், வடிவேலுவின் முழு சொத்து மதிப்பு சுமார் 130 கோடி இருக்கும் தெரியவந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |