தனது வாழ்வில் அடித்த பாரிய சூறாவளி! எனது துயரம் யாருக்கும் வரக்கூடாது: கண்கலங்கிய நிலையில் வடிவேல்
வைகைப் புயல் வடிவேல் புதிய படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய போது, கண்கலங்கும் படி பேசியுள்ளார்.
தனது நடிப்புத்திறமையினால் தனி இடத்தினைப் பிடித்த வடிவேல், படத்தில் வரும் தனது வசனத்தினை அடைமொழியாக ரசிகர்கள் அழைக்கும் விதமாக கொமடியில் கொடி கட்டி பறந்து வருகின்றார்.
சமீபத்தில் இயக்குனர் ஷங்கர் படத்தில் நடித்த நிலையில், திடீரென ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அவரது படத்திலிருந்து வெளியேறினார். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கம் வடிவேல் நடிப்பதற்கு ரெட் கார்டு போட்டது.
தற்போது அதிலிருந்து எல்லாம் மீண்டு வந்த வடிவேல் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் புதிய படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு மிகவும் உணர்வு பூர்வமாக பேசி அங்கிருந்தவர்களையே கலங்க செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், 'என் வாழ்க்கையில் ஏற்ப்பட்ட துன்பம் வேறு யாரும் ஏற்படக்கூடாது. என் வாழ்க்கையில் பெரிய சூறாவளி அடித்தது.
கொரோனோ காலகட்டத்தில் என்னுடைய காமெடியை பார்த்து மக்கள் மகிழ்ச்சியடைந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். கொரோனா வந்தபிறகு என் பிரச்னை சாதாரணமாக சென்றுவிட்டது என கூறினார்.
முதல்வரை சந்தித்துவிட்டு வந்தபின் எனக்கு எல்லாம் நல்லதாக நடைபெற்று வருவதாகவும், இனி எல்லாமே நல்லதே நடக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.
ன் நண்பர் விவேக்கின் மரணம் திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு, அவரது இடத்தையும் சேர்த்து நிரப்பவேண்டிய கடமை தனக்கு உள்ளதாக தெரிவித்த வடிவேலு, இனி வரும் காலங்களில் ஷங்கர் இயக்கத்திலோ, அல்லது ஷங்கர் தயாரிப்பிலோ நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.