வைகைப் புயலுக்கும் டைரக்டருக்கும் இடையில் மோதலா?
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வைகைப் புயல் வடிவேலு. எந்தவொரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தனது முழு பங்களிப்பையும் செலுத்தி மக்கள் மனதில் இன்றளவும் நீங்கா இடத்தை தக்க வைத்திருப்பவர்.
இவர் நடிப்பில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, இம்சை அரசன் 24ஆம் புலிகேசி திரைப்படத்தில் இயக்குநருடன் மோதல் ஏற்பட்டதால் அதிலிருந்து தொடர்ந்து நடிக்க மறுப்பு தெரிவித்து விலகினார்.
இந்த காரணத்துக்காக அவருக்கு நடிக்க தடை விதிக்கப்பட்டு, சில ஆண்டுகள் நடிப்பிலிருந்து விலகியிருந்தார்.
இயக்குநருடன் தகராறு
இந்நிலையில் 2021ஆம் ஆண்டு அந்த தடை நீக்கப்பட்டு, நாய்சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன் பின்னர் உதயநிதியின் மாமன்னன் திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில், அப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் பி.வாசு இயக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்திலும் நடிக்க நடிகர் வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், பி.வாசுவுக்கும் வடிவேலுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தகவல் பரவி வருகின்றது.
இதனால் இயக்குநர் பி.வாசு நடிக்க விருப்பமில்லாவிட்டால் சென்றுவிடலாம் என்று வடிவேலுவிடம் கோபத்தோடு கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தகவல் உறுதி படுத்தப்படவில்லை.