பிரபல காமெடி நடிகர் மருத்துவமனையில் அனுமதி...கடும் சோகத்தில் ரசிகர்கள்
நடிகர் வடிவேலுவின் காமெடி டீமில் ஒருவராக அறியப்பட்ட வெங்கல்ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சினிமாவில் சண்டை கலைஞராக தன் பயணத்தை தொடங்கிய வெங்கல் ராவ் சண்டைக் காட்சிகளின்போது விபத்து ஏற்பட்டு கால்முட்டி, தோள்பட்டையில் அடிப்பட்ட காரணத்தினால் நடிகராக மாறினார்.
வடிவேலுவுடன் தொடர்ந்து 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
வடிவேலு சினிமாவில் ஒதுங்கியிருந்த காலகட்டத்தில் அவரது டீமில் உள்ள பல நடிகர்களும் சினிமா வாய்ப்பில்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டனர்.
அதில் வெங்கல் ராவும் ஒருவர். இந்நிலையில் வடிவேலு மீண்டும் களம் இறங்கிய பிறகு பழைய ஆட்களையும் தனது கூட்டணியில் சேர்த்து வருகிறார்.
இப்போது சுராஜ் இயக்கி வரும் 'நாய்சேகர் ரிட்டன்ஸ்' படத்திலும் வெங்கலுக்கு வாய்ப்பு கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார்.
சிறுநீரகக் கோளாறால் அவதி
இந்நிலையில், சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்த வெங்கல்ராவ் திடீரென ஐதராபாத்தில் மருத்துவமனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
வெங்கல்ராவ் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என திரையுலகினர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
