வடிவேலு வீட்டில் மரணம்! சோகத்தில் மூழ்கிய குடும்பம்
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் நடிகர் வடிவேலுவின் சகோதரர் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.
நடிகர் வடிவேலு
தமிழ் சினிமா உலகில் நகைச்சுவையில் ஜாம்பவனாக திகழ்பவர் வடிவேலு. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகரும் ஆவார்.
1988ஆம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கிய திரைப்படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருந்தது.
மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நாய் சேகர், திரைப்படம் மூலம் ஹிரோவாக மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீஎன்டி கொடுத்தார். மேலும், சந்திரமுகி பாகம் 2 இரண்டிலும் நடித்திருக்கிறார்.
மரணம்
இந்நிலையில், வடிவேலுவின் சகோதரர் ஜெகதீசன் என்பவர் தன் கல்லீரல் செயலிழந்ததன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.
ஆனால் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்திருக்கிறார். மேலும், இவரது உடல் அஞ்சலிக்காக விரகனூரில் வைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வடிவேலு சகோதரனின் மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |