கோடிகளில் சொத்து மதிப்பு.. வடிவேலுவுக்கு எவ்வளவு மவுசு பாருங்க
நடிகர் வடிவேலுவின் 65 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நடிகர் வடிவேலு
தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவையாளராக கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகர் வடிவேலு.
இவர், கோலிவுட்டில் இதுவரையில் வடிவேல் அளவிற்கு யாரும் மக்களை சிரிக்க வைத்திருக்கமாட்டார்கள். அந்தளவு திறமைக் கொண்ட நடிகராக வடிவேலு பார்க்கப்படுகிறார்.
கடந்த சில வருடங்களாக சினிமாவில் வடிவேலு நடிக்காமல் இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் மூலம் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருந்தார்.
இயக்குநர் சுந்தர் இயக்கத்தில் வெளியான கேங்கர்ஸ் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு கதாநாயகராக நடித்திருப்பார். இவரின் கம்பேக் ரசிகர்களை மீண்டும் உற்சாகப்படுத்தியது.
இந்த திரைப்படத்தில் கேத்ரின் தெரசா, முனீஸ்காந்த், மைம் கோபி, பகவதி, வாணி போஜன் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
சொத்து மதிப்பு
இந்த நிலையில் இன்றைய தினம் வடிவேலு அவர்கள் அவருடைய 65- வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இந்த தினத்தை முன்னிட்டு நடிகர் வடிவேலுவின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், நடிகர் வடிவேலுவிடம் ரூ. 100 கோடி முதல் ரூ. 150 கோடி வரை சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பில் அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இல்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
