ஒரே ஒரு பர்கர் 2000 ரூபாயா? எப்படி தயார் செய்றாங்கனு நீங்களே பாருங்க! வேறலெவல் காட்சி
உலகில் ஆடம்பரமான வாழ்வுக்கு அறியப்படும் நகரமான துபாயில், தங்கமுலாம் பூசிய சிற்றுண்டி அறிமுகமாகியுள்ளது.
துபாயில் இந்திய உணவான வாடா பாவ் 22 காரட் தங்க முலாம் பூசப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, தங்க பிரியாணி மற்றும் தங்க பர்கர்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது தங்க வட பாவ்வும் வந்துவிட்டது.
துபாயின் கராமா (Karama) வில் அமைந்துள்ள O’Pao என்ற உணவகம் இந்திய உணவுகளை பரிமாறுவதற்கு பெயர் பெற்றது, இப்போது அது 'விலைமதிப்பற்ற' வடா பாவ் சிற்றுண்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது 99 திர்ஹம் (கிட்டத்தட்ட ரூ .2,000) விலையில் உள்ளது. இந்த தங்க முலாம் பூசப்பட்ட வடா பாவ், அங்கேயே சாப்பிட மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது பேக் செய்து வீட்டிற்கு எடுத்துப் போக முடியாது.
மஸ்ரத் தாவூத் ட்விட்டரில் பகிர்ந்த வடா பாவ் வீடியோ 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. இணையதளவாசிகளை ஆச்சரியப்படும் இந்த வைரல் வீடியோவில் வட பாவ் மரத்தால் செதுக்கப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டுள்ளதைக் காட்டுகிறது.
22k தங்க முலாம் பூசப்பட்ட வட பாவ் ஒரு பக்கத்தில் இனிப்பு உருளைக்கிழங்கு மற்றும் புதினா எலுமிச்சம்பழத்துடன் வருகிறது.
இந்த வீடியோ வடை தயாரிக்கப்படும் முறையையும், அது எப்படி தங்க முலாம் காகிதத்தால் அலங்கரிக்கப்படுகிறது என்பதையும் காட்டுகிறது.
#Gold_Vada_Paav This is what's wrong with the world: too many rebels without a cause. pic.twitter.com/JKeKsgOLEo
— Masarat Daud (@masarat) August 30, 2021