Viral Video: இந்த வீடியோ நிச்சயம் உங்களை மெய்மறக்கச்செய்யும்! மாற்றுத்திறனாளி இளைஞரின் திறமை
கைகளை இழந்த இளைஞன் ஒருவர் “வா வாத்தி” பாடலுக்கு இசையமைப்பாளர் ஜீவியைப் போலவே கீபோர்ட்டில் இசையமைத்த காட்சி வைரலாகி வருகிறது.
வாத்தி திரைப்படம்
தனுஷ் நடிப்பில் இம்மாதம் வெளியாகவிருக்கும் திரைப்படம் தான் வாத்தி. இப்படத்தை வெங்கி அத்லூரி இயக்கியிருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ்ராஜ் இசையமைத்திருக்கிறார். வாத்தி திரைப்படமானது தெலுங்கில் சார் என்ற பெயரில் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், இப்படத்தில் சம்யுக்தா, பாரதிராஜா, அசுரன் புகழ் கென் கருணாஸ், சமுத்திரக்கனி என பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படம் கடந்த வாரம் வெளியாகி அதிகமான வசூலை அள்ளி வருகின்றது.
“வா வாத்தி” பாடல்
அண்மையில் அனைவரின் வாயிலும் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் பாடல் தான் “வா வாத்தி” பாடல் இந்த பாடல் வரிகள் தற்போதைய இளைஞர்களை கவரும் வகையில் அமைந்திருப்பதால் அனைவரின் ப்ளே லிஸ்ட்டில் சேர்ந்து விட்டது.
இந்தப்பாடலுக்கு தன் கைகளை இழந்த இளைஞன் ஒருவர் கீபோரட்டில் வாசித்த காணொளி தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அந்தக் காணொளியை வெளியிட்டு "குறிப்புகளில் ஏதேனும் தவறு இருந்தால் முன்கூட்டியே மன்னிக்கவும் ஐயா" என பதிவிட்டு டுவிட்டரில் பகிர்ந்திருக்கிறார்.
இந்தக் காணொளியை பதிவிட்ட கொஞ்ச நேரத்தில் 4000இற்கும் அதிகமான லைக்குகளை பெற்றது. மேலும், குறிந்த இளைஞனை பாராட்டும் வகையிலும் அனைவரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.