அஜித்தின் வாலி படத்தின் காட்சியை காப்பியடித்த சிவகார்த்திகேயன்! தீயாய் பரவும் வீடியோ
எஸ்ஜே சூர்யா இயக்கிய வாலி படத்தில் வரும் ஒரு காட்சியை அப்படியே டான் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
இந்த படம் 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டான் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகின்றது. தற்போது வரை இந்த படத்தின் டிரைலர் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
ட்ரைலரின் படி, கல்லூரியில் ரகளை செய்யும் மாணவராக தான் சிவகார்த்திகேயன் காட்டப்படுகிறார்.
#SK recreated #Ajithkumar sir Magic infront of His Director @iam_SJSuryah
— ? Ajith Kumar? (@Anythingf4AJITH) May 7, 2022
Sir @Siva_Kartikeyan#DonTrailer #Vaalee @iam_SJSuryah pic.twitter.com/YKlxV1dWLn
மேலும் ஒரு காட்சியில் 'ஆசிரியர்களை டார்ச்சர் செய்வது எப்படி' என்கிற புத்தகத்தை சிவகார்த்திகேயன் கையில் வைத்து படித்துக் கொண்டிருப்பார். அந்த காட்சியை பார்த்து நெட்டிசன்கள் பலரும் சர்சை கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது மற்றுமொரு செய்தி வைரலாக பரவி வருகிறது. எஸ்ஜே சூர்யா இயக்கிய வாலி படத்தில் வரும் ஒரு காட்சியை அப்படியே டான் படத்தில் வைத்திருக்கின்றனர். இதனை ரசிகர்கள் கலாய்த்து தள்ளியுள்ளனர்.