நிலத்தை தோண்டியபோது கிடைத்த தங்க நாணயங்கள்... - விற்ற தொழிலாளி கைது..!
உத்திரப்பிரதேசத்தில் நிலத்தை தோண்டியபோது தங்கம், வெள்ளி, செம்பு நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
தங்கம், வெள்ளி, செம்பு நாணயங்கள் கண்டுபிடிப்பு
உத்திரபிரதேசம், ஷாம்லியில் தொழிலாளி ஒருவர் வீடு கட்ட நிலத்தை தோண்டியபோது, தங்கம், வெள்ளி மற்றும் செம்பு நாணயங்கள் அவருக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து, அந்த தொழிலாளி அந்த நாயணங்களை நகைக்கடையில் விற்பனை செய்துள்ளார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த தொழிலாளியிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, அவரிடம் 8 தங்கம், 26 வெள்ளி மற்றும் ஒரு செப்பு நாணயம் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து, நாணயங்களை மீட்டு, ஷாம்லி தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.