தனிமையில் இருந்த சிறுமிக்கு நேர்ந்த கொடுமை! பதறிய பெற்றோர்கள்; தீவைத்து எரித்த கொடுமை
உத்திரபிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டம் மதோடண்டா கிராமத்தை சேர்ந்தவர் ரேகா(16). இவர் 12ம் வகுப்பு படித்து வந்தார்.
பள்ளிக்கு சென்று வரும் இந்த சிறுமியை அதே பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் கிண்டல் செய்து வந்துள்ளனர்.
அது மட்டுமின்றி தொல்லையும் கொடுத்து வந்திருக்கின்றனர். இதனிடையில், கடந்த 2ஆம் தேதி பள்ளியை விட்டு வரும் போது அந்த இளைஞர்கள் வழக்கம் போல அவரை கிண்டல் செய்துள்ளனர்.
வன்கொடுமை
இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுமி, அந்த இளைஞர்களில் ஒருவரான தினேஷ் யாதவ் என்பவரை கன்னத்தில் அறைந்துள்ளார். இதனைக்கண்ட அவரது நண்பர்கள் பெண்ணிடம் அறை வாங்கியவன் எனக்கூறி கேலி செய்துள்ளனர்.
இதனால் அவமானமடைந்த அந்த இளைஞர், சிறுமியை பழிவாங்க முடிவு செய்துள்ளார். இதற்கு நண்பர் அமர் சிங்கிடமும் உதவிக்கேட்டு, கடந்த 7ம் தேதி உடல் நிலை சரியில்லாத காரணத்தில் வீட்டில் தனிமையில் இருந்த சிறுமியிடம் அத்துமீறி உள்ளனர்.
ரேகாவின் வாயில் துணியை வைத்து கட்டி இருவரும் சேர்ந்து அவரை வன்கொடுமை செய்துள்ளனர்.
அதன்பின்னும் ஆத்திரம் தீராத அவர்கள் சிறுமி ரேகா மீது அங்கிருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். வாயில் துணி இருந்ததால் ரேகாவால் சத்தம் போட முடியவில்லை.

ஆபத்தான நிலை
இந்த நிலையில், அவரது தந்தை வீட்டுக்கு வந்த போது தனது மகள் தீயில் கருகி உயிருக்கு போராடி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே, மேல் சிகிச்சைக்காக பிலிபிட் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடலில் 80 சதவீதம் தீக்காயம் அடைந்துள்ளதால், சுயநினைவு திரும்பியது. அப்போது அவர், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.
பின், தினேஷ் யாதவையும், அமர் சிங்கையும் போலீசார் கைது செய்தனர். அந்த சிறுமியும் ஆபத்தான கட்டத்தில் தொடர் சிகிச்சையில் உள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.