கருப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்னவென்று தெரியுமா?
புற்றுநோய் என்ற சொல்லைக் கேட்டாலே அனைவரும் ஒரு நிமிடம் பயந்துதான் போவோம். ஏனென்றால் அந்த நோயின் தீவிரத்தன்மை அப்படி. அவ்வாறான ஒரு புற்றுநோய் வகைதான் கருப்பை புற்றுநோய்.
கருப்பை என்பது இடுப்புப் பகுதியில் உள்ள ஓர் உறுப்பு. இங்குதான் கரு உருவாகிறது. இது அனைவரும் அறிந்ததே. இந்த கருப்பையிலும் புற்றுநோய் ஏற்படும்.
சரி இனி கருப்பையில் புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம். கருப்பையில் புற்றுநோய் ஏற்படும் பட்சத்தில் மாதவிடாய் நாட்களில் அதிகமான உதிரப்போக்கு ஏற்படும்.
அதுமட்டுமில்லாமல் மெனோபாசுக்குப் பின்னர் பிறப்புறுப்பில் இரத்தக்கசிவு ஏற்படும். உடலுறவுக்குப் பின் ஏற்படும் வலி, கடுமையான மன உளைச்சல், சோர்வு, மன அழுத்தம். இவ்வாறான பிரச்சினைகள் எதுவும் வந்தால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இதற்கான காரணங்கள்...
கருப்பையில் உள்ள செல்கள் மரபணுவில் உருமாற்றம் பெற்று, இயல்பான செல்களையும் மாற்றிவிடுகின்றன. இதுவே கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான மிக முக்கிய காரணங்களாக அமைகின்றன. இந்த செல்களானது, அதிகளவில் வளர்ந்து பல கட்டிகளை ஏற்படுத்துகிறது. இது உடலின் ஏனைய பாங்களை மாற்றியமைக்கிறது.
கருப்பை புற்றுநோய் ஆபத்தை உருவாக்கும் காரணிகளாக பின்வரும் காரணிகள் அமைகின்றன.
உடல் பருமன், கருத்தரிக்காமை, டாமொக்ஷிபென் மாத்திரைகள் அதிகமாக உட்கொள்வது, சிறுவயதிலேயே பூப்படைதல் போன்றவை அமைகின்றன.
இந்த நோயை கண்டுபிடிக்கும் முறைகளாக, உடல் பரிசோதனை மற்றும் லேப் பரிசோதனை உதவுகிறது. மற்றும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் கருப்பை ஆய்வும் உதவி செய்கிறது.
புற்றுநோயின் நிலையை பொறுத்து இதற்கான சிகிச்சைகள் அமைகின்றன. ஆரம்பக்கட்ட நோய் குணமாக, கீமோதெரபி, அறுவை சிகிச்சை, ரேடியேஷன் போன்றன உதவுகின்றன.
இந்த கருப்பை புற்றுநோய் அபாயத்தை எவ்வாறு தடுக்கலாம் எனப் பார்த்தால், உடல் பருமனை குறைப்பதன் மூலம், உடற்பயிற்சி செய்யும்போது, ஒரு வருடத்துக்கு குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரைகளை எடுப்பது, பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகளள், போன்றவற்றை அதிகளவு உணவில் சேர்த்துக் கொள்ளல், இறைச்சி வகைகள், கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்தல்.
இது பொதுவாக 50 வயதுக்கு மேல் வரக்கூடியது. எனவே அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டும்.