வானிலை அறிவிப்பில் கூறும் UTC நேரம்... எவ்வாறு கணக்கிடப்படுகிறது? பலருக்கும் தெரிந்திடாத அர்த்தம் இதோ
இந்திய வானிலை மையத்தின் மழை மற்றும் புயல் பற்றிய அறிவிப்புகளில் யுடிசி (UTC- Coordinated Universal Time) நேரப்படி என்கிற வகையில் வெளியிடப்படுகின்றன.
இதனை நாம் படிக்கும் போது சற்று குழப்பமாகவே இருக்கின்றது. மேலும் அதென்ன யுடிசி? என்ற கேள்வியும் எழுகின்றது.
அது வேறொன்றுமில்லை.. முன்பெல்லாம் க்ரீன்வீச் நேரப்படி(GMT - Greenwich Mean Time) என்பார்கள்.
அதாவது இங்கிலாந்திலிருக்கும் க்ரீன்வீச் நகரத்தை மையமாகக் கொண்டே உலக நேரம் கணக்கிடப்படுவது வழக்கமாக இருக்கின்றது. அதன்படி, இந்திய நேரமானது 5.50 மணி நேரம் முன்னதாக இருக்கும்.
ஆம், க்ரீன்வீச்சில் காலை 6 மணி என்றால், இந்தியாவில் காலை 11.30 மணி. இதைதான் யுடிசி என்கிற வகையில் குறிப்பிடுகின்றார்கள்.
எனவே யுடிசி நேரத்துடன் 5.30 மணி நேரத்தினைச் சேர்த்துக்கொண்டால் அதுதான் இந்திய நேரம் என்பது குறிப்பிடத்தக்கது.
