கூலித் தொழிலாளியின் மகளை பெண் கேட்ட ஆஸ்திரேலியா இளைஞர்!
ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் கூலித் தொழிலாளியின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்ட செய்தி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிறு கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர் தபஸ் என்பர் இவரது தந்தை அந்த கிராமத்தில் சைக்கிள் ரிப்பேர் செய்யும் கடை ஒன்றை வைத்துள்ளார்.
அவரது வருமானத்தில் வாழ்ந்து வந்த இந்த குடும்பத்திலிருந்து சிறுவயதிலேயே நன்றாக படிக்கும் மாணவியாக திகழ்ந்த நிலையில் மத்திய பிரதேச மாநில அரசாங்கத்திடம் அவருக்கு உதவித்தொகை கிடைத்தது.
மேலும் இந்த உதவித்தொகையை வைத்து அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரத்திற்கு உயர்கல்வி படிக்க சென்றுள்ளார்.
மலர்ந்த காதல்
அப்போது ஆஸ்திரேலியாவில் உள்ள தனது சீனியர் மாணவரான ஹான்சைல்ட் என்பவரை சந்தித்துள்ளார்.
ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழகி வந்த சூழலில் இவர்கள் அதன்பின் காதலிக்க தொடங்கியுள்ளார்கள்.
கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த சூழலில் கல்லூரி படிப்பை முடித்து நல்ல வேலை கிடைத்து செட்டில் ஆன பின் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.
திருமணம்
அதன் பின் வேலை கிடைத்ததும் திருமணத்திற்கு பெண் கேட்பதற்காக மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தபஸ் வீட்டிற்கு முறையாக பெண் கேட்க வந்துள்ளார்.
அவர்களின் காதலுக்கு குடும்பத்தினர் மறுப்பது ஏதும் தெரிவிக்காமல் சம்மதம் கூற, மிகவும் மகிழ்ச்சியுடன் அவர்கள் இந்த திருமணத்தையும் நடத்தி வைத்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக அந்த கிராமத்திலேயே வைத்து இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது.
அங்குள்ள மக்கள் ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
அதுமட்டுமின்றி எனக்கு இந்திய உணவு தனக்கு மிகவும் பிடிக்கும் குறிப்பாக ஜிலேபி விருப்பத்திற்குரிய உணவாகும் மேலும் மற்ற உணவுகளை விட இந்திய உணவை சாப்பிட முயற்சி செய்வதாகவும் கூறியுள்ளார்.