கழிப்பறையிலும் மொபைல் போனா? மனஅழுத்தம் ஏற்படும் ஜாக்கிரதை
கழிவறையில் இருந்து போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளைக் குறித்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கழிவறையில் மொபைல்
இன்றைய காலத்தில் கையில் மொபைல் போன் என்பது அவசியமான ஒன்றாகிவிட்டது. எங்கு சென்றாலும் மொபைல் போனை எடுத்துச் செல்வதும் பழக்கமாகியுள்ளது.
அதற்காக கழிப்பறையில் இருக்கும் போதும்கூட மொலைபல், ஐபேடு இவற்றினை பார்ப்பது தவறான பழக்கமாகும்.
தற்போதைய பரபரப்பான சூழ்நிலையில் கழிவறைக்கு செல்லும் அங்கு கூட நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கையில் மொலையும் கொண்டு செல்கின்றனர். அங்கு மின்னஞ்சள் சோதனை செய்வது, காணொளி பார்ப்பது என்ற செயலை செய்து வருகின்றனர்.
இவ்வாறான வழக்கம் சாதாரணமாகத் தோன்றினாலும், உடல்நலக் கோளாறுகள், மனநலச் சிக்கல், தோற்றப் பாங்கு உள்ளிட்ட பலவகை பாதிப்புகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பாதிப்புகள் என்னென்ன?
குளியலறை மற்றும் கழிவறைகளில் மொபைல் போன்களைப் பயன்படுத்துவது சுகாதார கேடுகளை ஏற்படுத்தும். ஈகோலை, சால்மோமெனல்லா, ஸ்ட்ரெப்டோகாக்கஸ் என நோய் விளைவிக்கும் நுண்கிருமிகள் இனப்பெருக்கம் செய்கின்றது.
ஈரமான சூழலில் செழித்து வளரும் தன்னை கொண்டுள்ள இந்த நுண்ணுயிரிகள், மொபைல் போனிலும் படுகின்றது. இதன் மூலம் நமது முகம், காது வாய்பகுதி என பரவுவதுடன், இறுதியில் இரைப்பை, குடல், சுவாசப்பிரச்சனை போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.
கழிவறையில் அமர்ந்திருக்கும் போது மொபைல் போன் பயன்படுத்துவது உடல்வலி ஏற்படுவதுடன், தோரணையில் சிக்கலையும் ஏற்படுத்துகின்றது. முதுகுப்புறங்களில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெக்ஸ்ட் நெக் எனப்படும் வளைந்த கழுத்து ஏற்பட காரணமாக இருக்கின்றது. இவை காலப்போக்கில் தலைவலி, முதுகுத்தண்டு பிரச்சனையையும் ஏற்படுத்துகின்றது.
நேரம் செல்வது தெரியாமல் கழிவறையில் போனில் அமர்ந்திருப்பது, மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை ஏற்படுத்துகின்றது. ஏனெனில் நீங்கள் மொபைலில் அவதானிக்கும் எதிர்மறையான செய்திகள் மன அமைதியை கெடுத்துவிடுகின்றது.
நீண்ட நேரம் கழிவறையில் மொபைல் போன் பாவிப்பதால் குடல் பகுதியில் அதிக அழுத்தம் ஏற்பட்டு, உடல்நலக் கோளாறு ஏற்படும். முக்கியமாக செரிமான மண்டலத்தில் பாதிப்பு ஏற்படும்.
இந்த பழக்கமானது தூக்க சுழற்சி முறையில் தாக்கத்தை ஏற்படுத்தும், உறங்கும் முன்பு கழிவறையில் அமர்ந்து அதிக நேரம் மொபைல் பார்த்துவிட்டு வருவது, ஒட்டுமொத்த தூக்கத்தின் தரத்தையும் குறைத்துவிடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |