பிறந்த குழந்தைகளுக்கு அரைஞாண் கயிறு கட்டுவது ஏன்? இதன் காரணமென்ன?
பிறந்த பச்சிளம் குழந்தைகள் முதல் வயதான ஆண்கள் வரை அரை ஞாண் கயிறு கட்டிருப்பதை அவதானித்திருப்போம். இதற்கு பின்னே பல அறிவியல் காரணம் மட்டுமின்றி பல ஆரோக்கிய காரணமும் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பெயர் காரணம் :
அரைஞாண் என்பதில் அரை எனில் - இடுப்பு வரையிலான பாதி உடலை குறிக்கிறது. ஞான் என்பது- கயிரைக் குறிக்கும் சொல் ஆகும். இவை இரண்டையும் இணைத்தே அரைஞாண் என்று சொல்லப்பட்டது.
குழந்தை பிறந்த சில நாட்களில் அவர்களின் இடுப்பில் தங்கம்,வெள்ளி அல்லது கருப்பு நிறத்தில் அரை ஞான் கயிறு கட்டி விடப்படுகின்றது.
ஆண்கள் கட்டிக்கொள்வதால் என்ன பயன்?
ஆண்கள் இடுப்பில் இந்த கயிற்றினை கட்டிக்கொள்வதுடால் ஹெர்னியா பிரச்சினை தடுக்கப்படுகின்றது.
மேலும் விரை வாதம், அண்ட வாதம், சீறுநீரக பிரச்சினை போன்றவற்றை தடுக்கின்றது.
பெண் குழந்தைகள் அவர்கள் பருவம் அடையும் வரை மட்டுமே கட்டி கொள்ள வேண்டும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
கருப்பு நிறம் துஷ்ட சக்திகளை நீக்கும் வல்லமை கொண்டதால், எந்தவொரு தீய சக்தியும் நெருக்காமல் இருக்கும்.