ஸ்மார்ட் ஃபோனின் பேட்டரி ஆயுளை அதிகரிக்க சூப்பர் ஐடியா.... இனி இந்த பிரச்சினை வரவே வராது!
smartphone
smartphone battery
By Nivetha
ஸ்மார்ட் ஃபோனில் நீங்கள் பதிவிரக்கம் செய்யும் ஆப்ஸ்கள் மற்றும் தீம்கள் அதிக பேட்டரி பவரை பயன்படுத்துகிறது.
நல்ல டீஸன்ட்டான பேட்டரி லைஃப் கொண்ட ஸ்மார்ட் போன்களை கண்டறிந்து வாங்குவது கடினமான விஷயம் அல்லது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும்.
பேட்டரியின் செயல்திறன் நீங்கள் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்தது என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று.
எனவே உங்கள் மொபைலின் பேட்டரி லைஃபை அதிகமாக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சில எளிய வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.
- லைவ் வால்பேப்பர்ஸ் உங்கள் ஃபோனை கவர்ச்சிகரமானதாக மாற்றினாலும், அது அதிக பேட்டரி பவரை பயன்படுத்துகிறது. எனவே பொதுவாக லைவ் வால்பேப்பர்ஸ் அல்லது அனிமேஷன் படங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும், அதற்குப் பதிலாக நல்ல டார்க் தீம் கொண்ட ஸ்டேட்டிக் வால்பேப்பர்ஸை தேர்ந்தெடுக்கவும்.
- பெரும்பாலும் மக்கள் தங்கள் மொபைலின் பிரகாசத்தை பிரைட்னஸை அதிகமாக வைத்திருக்கவே விரும்புகிறார்கள். ஆனால் இது அதிக பவரை இழுக்கும் மற்றொரு விஷயம் ஆகும்.
- பொதுவாக ஸ்மார்ட் போன்களில் ஆட்டோ பிரைட்னஸ் அம்சம் இருக்கும். இது தானாகவே லைட்டிங் அளவிற்கு ஸ்கிரீன் பிரைட்னஸை சரி செய்கிறது. இந்த அம்சத்தை நீங்கள் எப்போதும் ஆக்ட்டிவேட் செய்வது உங்கள் மொபைலின் பேட்டரியின் ஆயுளை நீட்டிக்க உதவும்.
- நோட்டிஃபிகேஷன்ஸ்களும் பேட்டரியை பயன்படுத்துகின்றன. குறிப்பாக உங்களுக்கு நிறைய நோட்டிஃபிகேஷன்ஸ் வருகிறது என்றால் தேவையற்ற ஆப்ஸ்களிலிருந்து வரும் புஷ் நோட்டிஃபிகேஷன்ஸை டர்ன் ஆஃப் செய்வது நல்லது. இல்லையெனில் நீங்கள் ஃபோனின் வைப்ரேட் மோடை ஆஃப் செய்யலாம்.
- குறிப்பிட்ட ஆப்ஸ் அதிக பேட்டரியைப் பயன்படுத்தினால், நீங்கள் மாற்று ஆப்ஸை தேர்வு செய்யலாம். அதே போல நாம் அப்ளிகேஷன்களை பயன்படுத்தும் போதும், அவற்றை சரியாக க்ளோஸ் செய்யாத போதும் அவை ஓபன் செய்யப்பட்ட நிலையில் பின்னணியில் இயங்கும். இது பேட்டரியின் திறனை பாதிக்கும்.
- மேலே குறிப்பிட்டுள்ள டிப்ஸ்களை பின்பற்றிய பிறகும் மொபைலின் பேட்டரி லைஃபில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றால் கையடக்கமான மற்றும் எங்கும் எளிதில் எடுத்து செல்ல கூடிய வகையில் இருக்கும் பவர் பேங்க் எனப்படும் வெளிப்புற பேட்டரி பேக்கை வாங்கி பயன்படுத்துங்கள்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US