நிர்வாண உடலுடன் கமெராவில் சிக்கியது ஏலியனா? திகிலூட்டும் காட்சிகள்
அமெரிக்காவை சேர்ந்த டொனால்ட் என்ற நபர் தன்னுடைய கமெராவில் ஏலியனின் உருவம் பதிவானதாக கூறி அதிரவைத்துள்ளார்.
ஏலியன்கள் எனும் வேற்றுகிரகவாசிகள் இருப்பதாக ஒரு சாரார் நம்பினாலும், அப்படி ஒன்றுமே இல்லை என மற்றொரு சாரார் கூறிவருகின்றனர்.
அடிக்கடி ஏலியன்கள் பூமிக்கு வந்து செல்வதாகவும் ஆதாரங்களை பலரும் வெளியிட்டு வருகின்றனர்.
100% உறுதிப்படுத்தப்பட முடியவில்லை என்றாலும் அவற்றை முழுமையாக மறுக்காமல் தொடர்ந்து ஆய்விலேயே ஈடுபடுகின்றனர் ஆய்வாளர்கள்.
அப்படியான ஒரு நிகழ்வு தான் அமெரிக்காவின் மொண்ட்டானா பகுதியில் அரங்கேறியுள்ளது, அதாவது டொனால்ட் என்ற நபர் வேட்டைக்காக தான் வைத்த கமெராவில் ஏலியனின் உருவம் பதிவாகியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கூறுகையில், என் கமெராவில் பதிவான உருவத்தை பார்க்கும் போது மனிதராக இருக்கலாம் என நினைத்தேன், ஆனால் நிர்வாணமாக இருந்ததுடன் தலை சற்று வித்தியாசமாக இருந்தது.
எங்கள் பகுதியில் தொடர்ந்து மர்மமான சம்பவங்களும் நடப்பதால் என் சந்தேகம் அதிகமாகி இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
