சிறுவன் கேட்ட ஒற்றை கேள்வி! Pink நிறத்தை திருமணம் செய்து கொண்ட பெண்
அமெரிக்காவில் 40 வயது மதிக்கத்தக்க Kitten Kay Sera என்ற பெண், Pink நிறத்தை திருமணம் செய்து கொண்ட விசித்திர சம்பவம் நடந்துள்ளது.
மரத்தை, தன்னைத் தானே, செல்லப் பிராணிகளை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு பற்றி கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால் அமெரிக்காவை சேர்ந்த Kitten Kay Sera, Pink நிறத்தை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
1980களில் இருந்தே Pink நிறத்தை அணிந்து கொண்டு வலம் வரும் அந்த பெண்ணுக்கு, 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஏன் அந்த நிறத்தை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என தோன்றியதாம்.
இதற்கு காரணம் தான் சந்தித்த சிறுவன், தன்னிடம் கேட்ட கேள்வியால் தானாம்.
உங்களுக்கு Pink நிறம் பிடிக்குமா? என கேட்க, ஆம் என கூறியுள்ளார் Sera, எனவே நீங்கள் ஏன் அதை திருமணம் செய்து கொள்ளக்கூடாது? என கேட்டுள்ளார்.
அப்போது தான், தான் அதிகம் விரும்பும் நிறத்தை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே வந்ததாம்.
திருமண நாளில் Pink நிறத்தில் Sera ஜொலி ஜொலிக்க, மோதிரத்தை மாற்றிக் கொண்டார்.
தான் சாகும் வரை Pink நிறத்தில் மட்டுமே உடைகளை அணியப்போவதாகவும் தெரிவித்துள்ளார், திருமண நிகழ்வுக்கு வந்த விருந்தினர்கள் கூட Pink நிறத்தில் உடைகளை அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.