கால் வலினு போன பெண்! அதிர்ந்து போன மருத்துவர்கள்...அடுத்த 48 மணி நேரத்தில் குழந்தை பிறந்த வினோதம்
23 வயதான பெண்ணுக்கு குழந்தை பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் தான் கர்ப்பமாக இருந்ததையே கண்டுபிடித்த விடயம் அனைவருக்குமே ஆச்சரியத்தினை கொடுத்துள்ளது.
பேய்ட்டன் ஸ்டோர் என்ற பெண்மணி அமெரிக்காவின் ஒமாஹா நகரத்தில் ஆசிரியையாக பணிபுரிகிறார்.
சமீபத்தில் தான் இந்த ஆசிரியப் பணியில் புதிதாக இணைந்துள்ளார்.
இவருக்கு வயது 23. பொதுவாக ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறார் என்றால் குழந்தை உருவான சில நாட்களில் இருந்தே அதற்கான அறிகுறிகள் தென்பட்டுவிடும்.
காலையில் எழுந்தவுடன் தலை சுற்றுவது, வாந்தி, குமட்டல் உணர்வு, என்று இந்த அறிகுறிகள் பெரும்பாலானருக்கு ஏற்படும், சிலருக்கு தோன்றாது.
இருப்பினும், குழந்தை வளர வளர கர்ப்பமாக இருப்பது கண்டிப்பாக தெரிந்துவிடும்.
ஆனால் இவருக்கு அவ்வப்போது சோர்வாக இருப்பதை மட்டுமே உணர்ந்துள்ளார். இதை தவிர்த்து வேறு எந்த அறிகுறியும் இல்லையாம்.
அதுமட்டுமில்லாமல் இவர் புதிதாக சேர்ந்த வேலைதான் இந்த சோர்வுக்கு காரணம் என்றும் நினைத்துக் கொண்டிருந்துள்ளார்.
உள்ளூர் லோக்கல் சேனல் வெளியிட்ட செய்தியின்படி, கால்கள் தொடர்ச்சியாக வீக்கமாக இருக்கிறது என்று மருத்துவரை சந்தித்திருக்கிறார்.
அங்கே அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர் கூறியுள்ளார்.
சோதனை தவறாக இருக்கக்கூடாது என்ற சந்தேகத்தை தீர்ப்பதற்கு இரண்டு முறை பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.
நிச்சயமாக பேய்ட்டன் கர்ப்பமாகத்தான் இருக்கிறார் என்பதை மருத்துவர் உறுதி செய்திருக்கிறார்.
கால்களில் வீக்கம் என்று மருத்துவரை சந்தித்த பேய்ட்டனுக்கு அதுவே ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் என்றாலுமே, அதற்கு அடுத்ததாக மற்றொரு அதிர்ச்சிகரமான செய்தியையும் மருத்துவர் கூறியிருக்கிறார்.
கால் வலி என்று சென்ற பெண்ணுக்கு குழந்தை பிறந்த ஆச்சரியம்
மருத்துவ பரிசோதனைக்கு சென்ற இடத்திலேயே பேய்ட்டனுக்கு சில நிமிடங்களில் குழந்தை பிறக்க இருக்கிறது என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.
கர்ப்பமாக இருக்கும் பொழுது குறிப்பிட்ட கால இடைவெளியில் அனைத்து பரிசோதனைகளையும் செய்து கர்ப்பிணி பெண் ஆரோக்கியமாக இருக்கிறாரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
குறிப்பாக ரத்த அழுத்தம், குளுக்கோஸ் அளவு ஆகியவை தொடர்ச்சியாக சரிபார்க்கப்பட வேண்டும். அந்த ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்றார்போல மருத்துவர்கள் மருந்துகளை பரிசோதிப்பார்கள்.
இதனால் கர்ப்பிணி பெண்ணின் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் குழந்தையும் ஆரோக்கியமாக வளரும்.
ஆனால் பேய்ட்டனுக்கு தான் கர்ப்பமாக இருப்பதே தெரியாமல் இருந்த காரணத்தால் அவருடைய கல்லீரல் மற்றும் கிட்னி சரியாக வேலை செய்யவில்லை.
அது மட்டுமல்லாமல் அவருக்கு உயர் ரத்த அழுத்தமும் இருந்தது என்று மருத்துவர் தெரிவித்திருக்கிறார். பேய்ட்டனின் உடல்நிலை மோசமாக இருப்பதால் குழந்தையை உடனடியாக டெலிவரி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பேட்ய்டன் மட்டும் அவரது பார்ட்னரிடம் தெரிவித்தார்.
உடனடியாக அவசர கால சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியில் எடுத்துள்ளனர்.
அடுத்தடுத்து காத்திருந்த இன்ப அதிர்ச்சி
பேய்ட்டனுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தையை 10 வாரத்துக்கு முன்பே பிறந்திருக்கிறது.
குழந்தையின் எடை 1 கிலோ 800 கிராம் இருந்தது. அம்மாவும் மகனும் ஒரே நாளில் பிறந்திருக்கிறார்கள்.
பேய்ட்டனின் பிறந்தநாள் அன்று தான் அவருடைய குழந்தையும் பிறந்திருக்கிறது. கர்ப்பமாக இருந்ததே தெரியாமல் இருந்த பெண்ணுக்கு, அவரின் பிறந்த நாளன்றே பரிசாக மகன் கிடைத்துள்ளது. இது அவரின் குடும்பத்திற்கும் இன்ப அதிர்ச்சி தான்.