43 லட்சம் கடன் வாங்கி போக்கிமான் கார்டுகள் சேகரிப்பு.. அமெரிக்கா வங்கிகளை அலற விட்ட நபர்!
வங்கியில் கடனை வாங்கி நபர் ஒருவர் போக்கிமான் விளையாட்டு கார்டை சேமித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதித்து தற்போது மீண்டு வருகிறது. இதனால், பொருளாதாரத்தை மீட்டெடுக்க அமெரிக்காவில், சிறு தொழில் செய்பவர்கலுக்கு வங்கியில் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த வினோத் (43) என்ற நபர் தொழில் கடனாக இந்திய மதிப்பில் 43 லட்சத்தை பெற்றுள்ளார்.
இதன்பின்னர் வாங்கிய கடனில், தொழில் ஏதுவும் செய்யாமல் போக்கிமான் தொடரை மையப்படுத்தி வெளியான விளையாட்டு கார்டுகளை வாங்கி இருக்கிறார்.
இதனால், அதிர்ச்சியடைந்த வங்கி அவர் மீது வழக்கு தொடர்ந்து இருக்கிறது.
மேலும், ஒருவர் வங்கியில் கடனை வாங்கி இப்படி விளையாட்டு கார்டை சேமிப்பதா? என உலக நாட்டு மக்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.