ஒரு மணி நேரம் அறைந்தால் உனக்கு சம்பளம்! இளைஞரின் புதிய முயற்சியை கண்டு எலான் மஸ்க் கொடுத்த ரியாக்ஷன்
பேஸ்புக் பக்கம் செல்லும் போது எல்லாம், தன்னை அறைய இளம்பெண் ஒருவரை அமெரிக்க வாழ் இந்தியர் வேலைக்கு அமர்த்தியுள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்கா சான் பிரான்சிகோ பகுதியைச் சேர்ந்தவர் மணீஷ் ஷெத்தி என்பவர் தன்னை அறைவதற்காகவே பெண்ணை ஒருவரை வேலையில் வைத்துள்ளார்.
இந்த பெண் வேலையே மணீஷ் பேஸ்புக் பயன்படுத்தும் போது எல்லாம் கன்னத்தில் அறைவது தான். இதற்காக அவரை தன் சீட்டின் பக்கத்திலேயே அமர்த்தி இருக்கிறார்.
அவர் அடிக்கும் ஒரு மணிநேரத்திற்கு 8 டாலரை சம்பளமாக கொடுத்துள்ளார். இந்திய மதிப்பில் ரூ.500 ஆகும். இவர் வெளியிட்ட வீடியோ வைரலாக எலான் மஸ்க் அதற்கு ரிப்ளை கொடுத்து வரவேற்று இருக்கிறார்.
மேலும், இதுகுறித்து மணீஷ் தெரிவிக்கையில், அந்த பெண்ணை பணிக்கு அமர்த்திய பின் தான் வேலை புராடெக்ட்டிவிட்டி அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இந்த வீடியோ எலான் மஸ்க் பார்வை வரை சென்ற சந்தோஷத்தை அளித்துள்ளது எனக்கூறி இருக்கிறார்.
The story of Maneesh Sethi, the computer programmer who hired a woman to slap him in the face every time he used Facebook, resulting in massive productivity increase [read more: https://t.co/Q5fKjYtFSo] pic.twitter.com/d8pnt3Jd8k
— Massimo (@Rainmaker1973) November 10, 2021