விஞ்ஞான உலகையே மிரள வைத்த மருத்துவர்கள்.... திடீரென கிடைத்த ஐடியா! பன்றி இதயத்தில் வாழும் மனிதன்
அமெரிக்கா மருத்துவர்களின் புதிய சாதனை தற்போது சமூக ஊடகங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.
அமெரிக்காவில் பன்றியின் இதயத்தை மனிதருக்கு பொறுத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
ஆய்வில் சில வகை பன்றிகளுக்கு உள்ள இதயமும் மனிதனின் இதயமும் ஒரே மாதிரியானதாக இருந்துள்ளதை மருத்துவர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.
இரு இதயமும் ஒரே வேலையை தான் செய்துள்ளதை அறிந்து மரபணு மாற்றப்பட்ட இதயத்தை மனிதனிற்கு பொறுத்தும் தொழிற்நுட்பத்தை அறிந்தனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் வாசிங்டன் மாகாணத்தின் யூனிவர் சிட்டி ஆஃப் மேரி லேண்ட் என்ற பகுதியில் 57 வயதான பென்னட் என்பவர் இதய நோய் சிகச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவருக்கு இதயத்திற்குள் நுரையிரலுக்கும் இடையே ஒரு பைபாஸ் குழாய் முலம் தான் இணைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது இருந்தது.
ஆனால் இவருக்கு விரைவில் முன்னுரிமை அடிப்படையில் இதயமாற்று அறுவை சிகிச்சைக்காக இதயம் கிடைப்பது நடக்காத காரியம் அதனால் அவருக்கான தீர்வு குறித்து மருத்துவர்கள் தேடும் போது இந்த பன்றி இதய ஐடியா உதித்தது. அதை மருத்துவர்கள் அவரது அனுமதியுடன் செய்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை பன்றியின் இதயம் இவருக்கு பொறுத்தப்பட்டது. சுமார் 8 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.
பின்னர் லைஃப் சப்போர்ட் அகற்றப்பட்ட நிலையில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார்.
இதையடுத்து மருத்துவர்கள் பன்றியின் இதயத்தை மனிதனிற்கு பொறுத்தி வெற்றி கண்டுள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.