கிரிப்டோகரன்சி விளம்பரத்துக்கு அமெரிக்கா அதிரடி தடை - ஏன் தெரியுமா?
கிரிப்டோகரன்சி பயன்பாடு உலக நாடுகள் அனைத்திலும் அதிகரித்துள்ளது. இதனால், அமெரிக்கவில் பொது இடங்கள் மற்றும் வணிக வளாகங்களில் கிரிப்டோகரன்சிகள் குறித்து வைக்கப்படும் விளம்பரங்கள் மக்களை தவறாக வழிநடத்துகின்றன.,
எனக் கூறி ஏழு நிறுவனங்களின் கிரிப்டோகரன்சி விளம்பரங்களுக்கு அமெரிக்க விளம்பர கட்டுப்பாட்டுத்துறை தடை விதித்துள்ளது.
அதற்கான காரணங்களை தெரிவித்து இருப்பதாவது, கிரிப்டோகரன்சி முதலீட்டு அபாயங்களை குறித்து விளக்கங்கள் தரத் தவறியது. அடுத்து, மக்களின் அனுபவமின்மையை பயன்படுத்தி, பாதுகாப்பற்ற முறையில் கிரிப்டோகரன்சிகளில் முதலீடுகளுக்கான விளம்பரங்களை செய்தல்.
இந்த காரணங்களுக்காக பிரபல நிறுவனங்களான பீட்சா(Pizza) நிறுவனத்தின் செயின் நிறுவனமான பாப்பா ஜான்ஸ் பீட்சா (Papa John's Pizza) மற்றும் காயின்பேஸ் (Coinbase) கிரேக்கென் (Kraken), எட்டோர் (Etoro) மற்றும் லுனோ (Luno) போன்ற கிரிப்டோகரன்சி வர்த்தக தளங்களின் விளம்பரங்களையும் அமெரிக்காவில் விளம்பரம் செய்ய தடை விதித்துள்ளது.
மேலும், இது போன்ற விளம்பரங்கள் பின்வரும் காலங்களில் மீண்டும் தோன்றாமல் இருப்பதை உறுதிசெய்யுமாறு அனைத்து நிறுவனங்களுக்கும் ASA உத்தரவிட்டுள்ளது.