உருளைக்கிழங்கு வறுவல் இனி இப்படி செய்து சாப்பிடுங்க!
பொதுவாகவே பெரும்பாலானவர்களுக்கு பிடித்த காய்கறிகளில் ஒன்று உருளைக்கிழங்கு, பொரியல், கறி என எதுவாக இருந்தாலும் அலாதி சுவையை தரும்.
இந்த பதிவில் நாவில் எச்சில் ஊறவைக்கும் உருளைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு- 2 (பாதியளவு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்)
கடுகு, சீரகம்- அரை டீஸ்பூன்
வெங்காயம்- 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி- 1 (சிறியது, பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
எண்ணெய்- 3 டீஸ்பூன்
செய்முறை
முதலில் உருளைக்கிழங்கை நன்றாக சுத்தம் செய்து பாதியளவு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிவைத்துக் கொள்ளவும், பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி உருளைக்கிழங்கை மட்டும் தனியாக வதக்கி எடுக்கவும்.
அடுத்ததாக அதே கடாயில் கடுகு, சீரகம், கருவேப்பிலை சேர்க்கவும், இதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும், இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பச்சை வாசனை போன பின்னர் மசாலா பொருட்களை சேர்த்து கிளறி விடவும், சிறிதளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
இதனுடன் கடைசியாக உருளைக்கிழங்கு சேர்த்து பிரட்டவும், தண்ணீர் நன்றாக குறைந்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கினால் உருளைக்கிழங்கு வறுவல் தயார்!!!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |