தொப்பை பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் கறிவேப்பிலை குழப்பு... எப்படி செய்வது?
பொதுவாகவே அனைவருக்கும் உடல் எடையைக் குறைத்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால், என்னதான் முயற்சி செய்தாலும் பலருக்கு தொப்பையை குறைக்க முடியவில்லையே என்ற கவலை இருக்கத்ததான் செய்கின்றது.
அப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமாக முறையில் தொப்பையை குறைக்கம் கறிவேப்பிலை குழம்பு எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை – 1கட்டு
கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்
மிளகு - 10
காய்ந்த மிளகாய் – 2
உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்
துவரம் பருப்பு – ஒரு ஸ்பூன்
கடுகு – 1/2 ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
நல்லெண்ணெய் – 100 மில்லி
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – 1 கொத்து
செய்முறை
முதலில், பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பின்னர், இதில் உறுவி வைத்துள்ள கறிவேப்பிலை தழைகளை சேர்த்து வறுத்து, தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அதே பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
பின்னர் இந்த சேர்மத்தை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றிக்கொள்ளவும். இதனுடன் வறுத்து வைத்துள்ள கறிவேப்பிலையை சேர்த்து பொடியாக அரைத்து, தண்ணீர் சேர்த்து மசாலா கரைசல் தயார் செய்யவும்.
['
இதனிடையே ஒரு சிறு நெல்லிக்காய் அளவு புளியினை ஒரு கோப்பையில் தண்ணீருடன் சேர்த்து ஊற வைத்து, புளி கரைசல் தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
தற்போது கறிவேப்பிலை குழம்பு தயார் செய்ய, பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் இதனுடன் நாம் தயார் செய்து வைத்துள்ள மசாலா கரைசல் மற்றும் புளி கரைசல் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர் கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் மணமணக்கும் கறிவேப்பிலை குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |