சிறுநீரை வைத்தே நீரிழிவு நோயை எப்படி கண்டறிவது?
நீரிழிவு நோய் இன்று உலகெங்கும் காணப்படும் ஒரு பிரச்சினையாக இருந்து வருகின்றது. உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய இடத்தில் 9-வது இடத்தில் நீரிழிவு காணப்படுகின்றது.
இரண்டு வகையான நீரிழிவு நோய்கள்
நீரிழிவு நோயில் இரண்டு வகைகள் காணப்படுகின்றது. அதாவது டைப் 1 மற்றும் டைப் 2 என்று வகைப்படுத்தப்படுகின்றது.
அதாவது நமது நோய் எதிர்ப்பு சக்தியே நமது உடலை தாக்கி இன்சுலின் சுரப்பதை முற்றிலும் தடை செய்வதால் டைப் 1 நீரிழிவு ஏற்படுகின்றது.
கணையம் முறையாக செயல்படாமல் இருந்து போதுமான இன்சுலின் சுரக்காமல் இருப்பது இன்சுலின் உற்பத்தியை தடுப்பது டைப் 2 நீரிழிவு ஆகும். இவை பெரும்பாலான மக்களை தாக்கியுள்ளது.
நீரிழிவு நோயும், சிறுநீர் கழித்தலும்
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் சிரமத்தை சந்திப்பார்கள். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது, அதனை சிறுநீரகங்கள் குளுக்கோஸை உறிஞ்சும் பணியை மேற்கொள்கின்றது. இத்ததருணத்தில் நீடித்த தாகமும், அடிக்கடி கழிவறை செல்ல வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது.
ஆரோக்கியமாக நபர் ஒருவர் 6 முதல் 8 முறை சிறுநீர் கழிக்கலாம். தாகம் அதிகமாக ஏற்படுவதும், சிறுநீர் அதிகமாக கழித்தலும் நோயின் முக்கிய அறிகுறியாகும்.
சாதாரணமாக இருக்கும் நபர்கள் 2 லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ளும் நிலையில், நீரிழிவு நோயாளிகள் 3 லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொள்வார்கள். பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் 20 லிட்டர் தண்ணீரையும் அருந்த வாய்ப்புள்ளதாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |