உணவில் தினமும் உளுந்தம் பருப்பு எடுத்துக்கோங்க... அதிசயத்தை கண்கூடாக பார்ப்பீங்க
ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கருப்பு உளுந்தின் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உளுந்தம் பருப்பு
புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் என ஏராளமான ஊட்டச்சத்துகள் நிரம்பியிருக்கும் ஆரோக்கியம் நிறைந்த பருப்பு தான் உளுந்தம் பருப்பு ஆகும்.
உளுந்தம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கின்றது.
மேலும் இப்பருப்பில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துவதுடன், அஜீரண கோளாறு பிரச்சனை இருப்பவர்களுக்கு சிறந்ததாகவும் இருக்கின்றது. ஆகவே அஜீரண பிரச்சனை உள்ளவர்கள் நாள்தோறும் உளுந்தம் பருப்பை எடுத்துக் கொள்ளலாம்.
குடல் ஆரோக்கியத்தையும் பராமரிக்க உளுந்து உதவுகின்றது. இதிலுள்ள நார்ச்சத்து உடம்பிற்கு உடனடியாக ஆற்றலை கொடுத்து சோர்வில் இருந்து விடுபடுவதற்கு உளுந்தம் பருப்பு உதவுகின்றது.
ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கவும், இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கும் தன்மையையும் கொண்டுள்ளது.
ரத்த சோகை பாதிப்பையும் வெகுவாக குறைக்கும் உளுந்து, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்க உதவுகின்றது.
உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதயம் சார்ந்த நோய் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |