மனைவியிடம் அடி தாங்கமுடியாமல் பனைமரத்தில் வசிக்கும் கணவர்! அதிர்ச்சி காரணம்;
மனைவியிடம் இருந்து தப்பிக்க கணவன் பனை மரத்தில் வீடு கட்டி குடியேறிய சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
உத்திரபிரதேசம் மாநிலம் மாவ் மாவட்டத்தை சேர்ந்த ராம் பிரவேஷ் என்பவருக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால், மனைவி அடிக்கடி கணவரை தாக்கி வந்துள்ளார். இருந்தாலும் இதை எல்லாம் சமாளித்து வந்த ராம் பிரவேஷ். நாட்கள் செல்ல செல்ல அடி தாங்க முடியாமல், என்ன செய்வது என்று பனை மரத்தின் மீது ஏறி வீடு கட்டி வசிக்க தொடங்கியுள்ளார்.

மேலும், பனை மரத்தில் அவர் இருக்கும்போது உணவை கயிறு கட்டி அனுப்பிவிடுவார்கள். எனவே, பிரவேஷை மரத்தில் இருந்து கீழே இறங்கும்படி கிராம மக்கள் வற்புறுத்திய போதிலும் அவர் இறங்கவில்லை.
இறங்கும்படி கட்டாயப்படுத்தினால் அவர்கள் மீது கற்களை வீசி விரட்டியடித்துள்ளார்.
தொடர்ந்து கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு வந்து வீடியோ எடுத்து, இப்பிரச்சினைக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவித்து இருக்கின்றனர்.