உப்பு கருவாடும் ஊற வச்ச சோறும் சாப்பிட்டு இருக்கீங்களா? இப்படி ட்ரை பண்ணி பாருங்க....
உப்பு கருவாடு, ஊறவச்ச சோறும் என்று சொன்னாலே பாதிபேர் வாயில் எச்சில் ஊறும். இந்த உணவுக்கு வேறு எந்த உணவும் அடித்துக் கொள்ள முடியாத அளவிற்கு அப்படியொரு சுவை இருக்கிறது.
இந்த உப்பு கருவாடும் ஊற வச்ச சோறும் வீட்டில் ஒரு நாள் செய்து சாப்பிட்டால் இன்னும் அபரீத சுவையில் கிடைக்கும். இதனை எப்படி செய்வதென்று தற்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கருவாடு - 50 கிராம்
வெங்காயம்- 100 கிராம்
தக்காளி -100 கிராம்
பச்சை மிளகாய்
மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
கடுகு- 1/4 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு-1/2 ஸ்பூன்
மல்லித்தழை
கறிவேப்பிலை-1 கொத்து
உப்பு, எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை
முதலில் கருவாட்டை அம்மியில் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவேண்டும்.
நறுக்கிய வெங்காயம், தக்காளியை அதில் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
மஞ்சள்தூள், மிளகாய்தூள், மல்லித்தூள், கரம் மசாலா சேர்த்து நன்றாகக் கிளறிவிட வேண்டும்.
பின்னர் தக்காளி சேர்த்து வதக்கி, பின்னர் பொடித்து வைத்துள்ள கருவாட்டு துண்டுகளை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
அதில் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கிளறி ஐந்து நிமிடங்கள் வேகவைக்க வேண்டும்.
பொடித்த கருவாட்டுத் துண்டுகள் தொக்கு பதத்திற்கு வந்த பிறகு, அடுப்பில் இருந்து இறக்கி கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துக் கிளறினால் கறுவாட்டு தொக்கு தயார்.
அதன் பின் பழைய சாதத்தை மண் சட்டியில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும். அதில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தேவையென்றால் தயிர் சேர்த்து செய்து வைத்து கறுவாட்டு தொக்கையும் தொட்டு சுவைத்தால் அப்படியொரு சுவை கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |