யுபிஐ பரிவர்த்தனைகளில் புதிய மாற்றம்: மோசடிக்கு முற்றுப்புள்ளி?
யுபிஐ பரிவர்த்தனை மோசடியை தடுப்பதற்கு ஜுன் 30 முதல் புதிய நடைமுறை அமலுக்கு வருகின்றது.
இன்றைய காலத்தில் கூகுள் பே, போன் பே மற்றும் பேடிஎம் போன்ற யுபிஐ பேமெண்ட் ஆப்கள் மூலம் நடக்கும் பரிவர்த்தனை அதிகமாக இருக்கின்றது.
கையில் பணம் வைத்து செலவு செய்வதை விட இந்த பரிவர்த்தனைகள் பலமடங்கு அதிகரித்து வருகின்றது.
அனைத்து இடங்களிலும் இந்த முறையில் தான் பணம் செலுத்தியும் வருகின்றனர். இதனால் சில மோசடிகளும் அவ்வப்போது எழுகின்றது.
இதனை தடுப்பதற்கு இந்திய தேசிய பரிவர்த்தனை வாரியம் சில மாறுதல்களை கொண்டுள்ளது.
புதிய நடைமுறை
மொபைல் வாயிலாக நடக்கும் பணப்பரிவர்த்தனையில் மோடியை தடுப்பதற்கு ஜுன் 30ம் தேதி புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தற்போதுள்ள நடைமுறைகளின்படி, நாம் ஒருவருக்கு பணம் அனுப்பும்போது, அவருடைய பெயரை நம் மொபைலில் எப்படி பதிவு செய்துள்ளோமோ அதை பயன்படுத்தி அனுப்புகிறோம்.
அதுபோல, மற்றவரின் மொபைல் எண்ணை பயன்படுத்தியும் பணம் அனுப்பலாம் அல்லது க்யூ.ஆர்., கோடு ஸ்கேன் செய்து அனுப்ப முடியும்.
இவ்வாறு அனுப்பும்போது, பணத்தைப் பெறுபவர், தன் பெயரை அவர்களே நிர்ணயித்துக் கொள்ள முடியும். இதனால் மோசடிகாரர்கள் பொய்யான பெயரை காட்டி பணம் பெற்றுக் கொள்ள முடியுமாம்.
சரியான பெயர்
ஜுன் 30ம் தேதி முதல் புதிய நடைமுறையை செயல்படுத்த என்.பி.சி.ஐ உத்தரவிட்டுள்ளது. அதாவது இனி, பணம் பெறுபவரின் பெயர் வங்கிக் கணக்கில் உள்ளபடியே காட்டப்படும்.
இதன் மூலம் சரியான நபருக்கு பணம் அனுப்பப்படுவதை உறுதி செய்ய முடியும். மேலும், வங்கிகள், என்.பி.சி.ஐ., மற்றும் விசாரணை அமைப்புகளுக்கும், மோசடிகள் தொடர்பாக விசாரணை நடத்தவும் இது உதவும்.
பாதுகாப்பாகவும், அதிவேகமாகவும் பணபரிமாற்றம் செய்ய தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக இந்திய தேசிய பரிவர்த்தனை வாரியம் தெரிவித்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |