திருமணமான ஒரே மாதத்தில் கொலை செய்யப்பட்ட இளம்பெண்: வெளியான சித்ரவதை காட்சி
உத்திரபிரதேசத்தில் இளம்பெண் ஒருவரை கணவரும், அவரது குடும்பத்தினரும் கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தில் புலந்த்சாகர் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவரை உறவினர்கள் சூழ்ந்து தாக்கும் காட்சி இணையத்தில் வெளியானது.
பலரும் இந்த சம்பவம் எங்கே நிகழ்ந்தது என்றும் பொலிசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில், இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.
ஹசீம் என்பவர் தனது மனைவியை தாக்கும் காட்சியே இதுவாகும். வெள்ளிக்கிழமை தாக்கப்பட்ட பெண் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.
அதன் பின்னரும் சம்பந்தப்பட்ட கொலையாளிகளை போலீசார் கைது செய்யவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை குற்றம்சாட்டி இருக்கிறார்.
முதல் மனைவியை விவகாரத்து செய்ததாக கூறி கடந்த மாதம் எனது சகோதரியை திருமணம் செய்து கொண்டார். ஆனால் வரதட்சணை கேட்டு தொடர்ந்து அவரை டார்ச்சர் செய்து வந்தார்.
இந்த நிலையில்தான் அவரும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து என் சகோதரியை அடித்தே கொலை செய்திருக்கிறார்கள். இதுபோன்ற கொடூரம் எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாது. என் சகோதரிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கண்ணீர் வடித்திருக்கிறார் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி.
பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் கொலை மற்றும் வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை அறிந்து ஹசீம் தலைமறைவாக இருக்கிறார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்...
Horrific video, viewers discretion advised
— Arvind Chauhan (@Arv_Ind_Chauhan) September 20, 2021
Based on woman's father complaint, FIR of dowry death is being lodge against the accused husband Hashim: @bulandshahrpol SSP.
However, this should be IPC 302, 352.#Bulandshahrwoman https://t.co/Uv0dHfIOx3 pic.twitter.com/UbZ5LLueWD