இதெல்லாம் ஒரு குத்தம்மா! மாலை போட்ட மாப்பிள்ளையால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!
இன்றைய சமுதாயத்தில் திருமண மேடையில் நடக்கும் சம்பவங்களும், அதனால் திருமணம் நிற்பது வாடிக்கையாகவே மாறிவிட்டது. திருமணம் என்றால், அந்த காலக்கட்டத்தில் மிகபெரிய விஷயமாகவும், அனுசரிப்பும், சம்பிரதாயங்களையும் பின்பற்றுவார்கள்.
ஆனால், இப்பொழுது எல்லாம் திருமணம் விவாகரத்து தான் பெரியதாக மாறி இருக்கிறது. அதிலும், குறிப்பாக வட இந்தியர்கள் செய்யும் அட்டூழியம் தான் பெரிய அளவில் திருமண தடைகள் வைரலாக ஆரம்பித்துவிட்டன.
அந்த வகையில், உத்திர பிரதேச மாநிலத்தின் ஆரையா என்னும் மாவட்டத்தில், இருவருக்கு திருமணம் நடைபெற இருந்தது. திருமணம் செய்ய இருந்த மணமகன், மணமகளுக்கு தாலி கட்டுவதற்கு முன், மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், சற்று வேடிக்கையை கூட்டுவதற்காக, மாலையை கழுத்தில் வாங்கிக் கொள்ளாத படி, மணமக்கள் அடம் பிடிப்பார்கள். ஆனாலும், மணமக்கள் மறுத்து குடும்பத்தினர்கள் ரசிக்கும்படி வேடிக்கை காட்டுவார்கள்.
அப்படி இங்கே செய்த விளையாட்டே விபரீதத்தில் முடிந்திருக்கிறது. மாலை மற்றும் சடங்கின் போது மணமகன் மாலையை தனது கழுத்தில் இருந்து தூக்கி எறிந்ததாக மணப்பெண் தன்னுடைய திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
அதற்கு, நான் மாலையை எறியவில்லை என மணமகன் தெரிவித்த போதும், அதனை மணப்பெண் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், இரு வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மணமகளிடம் சமாதானம் பேசி, திருமணத்திற்கு சம்மதம் சொல்ல மணமகனின் வீட்டார், முயற்சி செய்துள்ளனர். ஆனாலு, அந்த முயற்சி தோல்வியாகியுள்ளது.
பின் பெண்ணிற்கு வேறு ஏதேனும் பிரச்சனை என்பதற்காக தான், அவர் இப்படி எல்லாம் செய்து கொண்டிருக்கிறார் என்றும், மணமகனின் வீட்டார் குற்றஞ்சாட்டியதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
மாலையை தூக்கி வீசியதற்காக, திருமணத்தை மணப்பெண் நிறுத்திய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.