50 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்! யார் யார் தெரியுமா?
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் நடிகைகளால் குறிப்பிட்ட காலத்துக்கு மேல் கதாநாயகியாக தங்களின் நிலையை தக்கவைத்துக்கொள்ள முடிவதில்லை .
அப்படி முன்னணி நடிகைகளாக திரையுலகில் வலம் வந்த சில நடிகைள் 50 வயதை தொட்டும் இன்னும் திருமண பந்தத்தில் இணையாமல் சிங்கிளாகவே இருக்கின்றார்கள்.
ஆமாங்க பலபேரின் கனவு கன்னிகளாக திகழ்ந்த அந்த சில சினிமா பிரபலங்கள் யார்? 50 வயதை நெருங்கும் நிலையிலும் ஏன் திருமணம் செய்யவில்லை என்ற காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
காரணம் என்னவா இருக்கும்
90 களில் ஆண்கள் மனதை கொள்ளையடிக்கும் அளவில் கவர்ச்சியில் தூள் கிளப்பியவர் தான் நடிகை மும்தாஜ். இவர் 45 வயதை நெருங்கியும் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு அவரின் உடல் நலனில் சில பிரச்சினை இருப்பது தான் காரணமாம்.
80 களில் பெரும்பாலான ஆண்களின் கனவு கன்னியாக இருந்தவர் தான் நடிகை சித்ரா. கண்ணியமான தனது நடிப்பால் கதாநாயகியாக மட்டும் தனது நடிப்புக்கு முடிவுக்கட்டாமல் இன்றும் பல மொழிகளில் அம்மா மற்றும் அக்கா போன்ற கதாபாத்திரங்களில் தனது திறமையை பறைசாற்றும் இவர் நிறைவேறாத காதல் காரணமாகவே 50 வயதை கடந்தும் இன்னும் தனிமையில் வாழ்கின்றார்.
90 களின் ஜெனிலியாவாக திகழ்ந்தவர் தான் நடிகை கௌசல்யா, குறும்புத்தனமான தனது நடிப்பின் காரணமாக இவருக்கு அந்த காலத்தில் பெண்களிலும் ரசிகர் பட்டாளமே இருந்தது. 45 வயதானாலும் இன்று இளமையாக வலம் வரும் இவருக்கு ஆன்மீகத்தில் இருக்கும் நாட்டம் தான் திருமணம் செய்யாததற்கு காரணமாம்.
90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்து இன்றும் பலரின் மனதில் நீங்காத இடம்பிடித்த காதல் தேசம் திரைப்பட நாயகி தபு, 50 வயதை கடந்தும் திருமணம் செய்யாமல் சிங்கிளாக இருக்க காதல் தோல்வி தான் காரணம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக பாட்ஷாவில் பட்டையை கிளப்பியவர் நடிகை நக்மா, இவர் ஜோதிகாவின் அக்கா என்பது அனைவரும் அறிந்ததே. இவரும் காதல் தோல்வி காரணமாகதான் திருமணம் செய்யாமல் தனிமையில் வாழ்கிறார்.
கலைக்குடும்ப வாரிசான நடிகை சோபனா பரதக் கலையில் தேர்ச்சிப் பெற்றவர். இவரின் நடிப்பில் வெளிவந்த தளபதி படம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது. இவர் கலையார்வம் மிக்க நடிகை என்பது அனைவரும் அறிந்ததே. பரதக் கலைக்காக தனது வாழ்வையே அர்பணித்து அவர் 53 வயதாகியும் இன்னனும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |